தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

பன்னெடுங் காலமாக, இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் ரமழான் காலத்தில் சமயக் கிரியைகள் மற்றும் இறை தியானங்களில் ஈடுபட்டு, அடுத்த மனிதர்களுக்கு உதவி உபகாரங்களைச் செய்து நாட்டின் கலாசார மற்றும் சமய பன்முகத்தன்மைக்கு முன்மாதிரியான அர்த்தத்தை வழங்குகிறார்கள். நாட்டின் நிர்வாகச் செயற்பாடுகள், வர்த்தகத் துறைகள், கல்வி மற்றும் பல்வேறு தொழிற் துறைகள், விளையாட்டு மற்றும் கலாசாரத் துறைகளில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஆற்றிவரும் செயற்திறமான பங்களிப்பிற்காக இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து … Read more

சதொச அத்தியாவசியப் பொருட்கள் சில இன்று முதல் குறைந்த விலையில்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

புழுதியாறு ஏற்று நீர் பாசனத் திட்ட புனரமைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் மாயவனூர் புழுதியாறு குள ஏற்று நீர் பாசனதிட்ட புனரமைப்பு தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் குறித்த திட்ட புனரமைப்புக்கான அனுமதியை வடக்கு மாகாண சபையிடம் பெறுவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன்பகுதியில் பயிர்ச் செய்கை தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டு, இப்பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வுகாணுதல் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

புத்தாண்டு காலத்தில் விசேட அஞ்சல் விநியோக சேவை

சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகை ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் தபால் விநியோகிப்பதற்கான விசேட சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பொது விடுமுறை தினமான ஏப்ரல் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள தபால்ஃதுணை தபால் நிலையங்கள் மூலம் Cash-on-Delivery, வெளிநாட்டு கூரியர் சேவை மற்றும் பார்சல் விநியோகம் ஆகிய விசேட சேவைகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலாபம் ஈட்டாத நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

நாட்டைக் கடன் சுமையிலிருந்து விடுவிப்பதற்கு உரிய முறைமை அமைக்கப்படாவிட்டால் நாட்டு மக்கள் நீண்ட காலம் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் மின்சார சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மின்சார சபைக்கு நட்டம் … Read more

சுப நேரத்தில் ஒரு மரம் – தேசிய மரநடுகைத் திட்டம்

புத்தாண்டை முன்னிட்டு சுபநேரத்தில் ஏற்றுமதி ஆற்றல் வளமுள்ள பல்பருவப் பயிர் நடுகை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. புத்தாண்டு சுபநேர சிட்டைக்கமைய ஏப்ரல் 18 திகதி மலரும் தேசிய மரநடுகை சுபநேரத்தில் (காலை 6.16) உணவுப் பெறுமதியுள்ள பல்பருவப் பயிரை நடுகை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக நேற்று (08.04.2024) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு: 14. ‘சுப நேரத்தில் ஒரு மரம்’ – தேசிய மரநடுகைத் திட்டம் 2024 ஆண்டுக்குரிய புத்தாண்டு சுபநேர சிட்டைக்கமைய … Read more

எரிவாயு, மின்சாரம், டொலர் குறைந்துள்ளது – மரக்கறிகளின் விலையிலும் குறைவு – பந்துல குணவர்தன

ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் எரிவாயு, மின்சாரம், டொலர் என்பன கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாகவும், மரக்கறிகளின் விலையும் ஓரளவுக்கு குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்காலத்தில் தம்புள்ளை, மீகொட, வெலிசறை, வெயங்கொடை ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதுடன், 1 கிலோ … Read more

2500 ஆங்கில மொழி கற்பிக்கும் ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீர்மானம்

‘அனைவருக்கும் ஆங்கிலம்’ வேலைத்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற 765 பாடசாலைகளை 1,000 பாடசாலைகளாக அதிகரிப்பதற்கும், ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற அனுமதியளிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கையை 6,500 வரைக்கும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நேற்றைய தினம் (08) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 10. ‘அனைவருக்கும் ஆங்கிலம்’ … Read more

பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த விசேட குழு

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் முறைப்பாடுகளுக்கிணங்க ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டு, வெளி ஆக்கிரமிப்பாளர்களால் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது குறித்து ஆராய்ந்ததுடன் பழங்குடியின மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர். அவர்களின் பிரச்சினைகளை ஆராயவும், பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் … Read more