மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மி.மீ மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 12ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இன்று முதல் (11) நாட்டில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் … Read more

இன்றும் (12) நாளையும் (13) மதுக்கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு.

ஏப்ரல் 13 ஆம் திகதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசேட அனுமதி பெற்ற இடங்கள் தவிர, கலால் உரிமம் பெற்ற ஏனைய அனைத்து சில்லறை விற்பனைக்கான மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று கலால் ஆணையர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் உரிமம் பெற்ற மூன்று நட்சத்திர வகுப்பிற்கு மேல் உள்ள ஹோட்டல்களில் தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு மற்றும் விசேட அனுமதி பெற்ற இடங்களுக்கு … Read more

IndiGo இலங்கையுடனான தொடர்பை வலுப்படுத்துகிறது – இன்று முதல் மும்பை-கொழும்பு நேரடி விமான சேவை

IndiGo ஏப்ரல் 12 முதல் மும்பை-கொழும்பு நேரடி விமானங்களை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது இணைப்பை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, IndiGo வாரத்தில் மூன்று முறை செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. IndiGo கொழும்பில் இருந்து இந்தியாவின் மூன்று இடங்களுக்கு பயணிக்கிறது (சென்னை ஒரு நாளைக்கு இரண்டு முறை, பெங்களூர் ஒரு நாள் மற்றும் ஹைதராபாத் வாரத்தில் ஆறு நாட்கள்). இந்த புதிய பாதை விஸ்தரிப்பின் மூலம், இது நான்கு இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ள … Read more

ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி திருகோணமலை சமுத்திரகம பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் ஆறு (06) கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார். அதன்படி, 2024 ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி திருகோணமலை சமுத்திரகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான தற்காலிக அறையொன்றை கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை மகாவலி … Read more

நெடுந்தீவின் முன்னேற்றத்திற்கு விசேட நிதி –  அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்கமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் (10.04.2024) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற   இக்கலந்துரையாடலில், இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. அதேபோன்று பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான கடல் போக்குவரத்து, வீதிப் போக்குவரத்து, விவசாயம், கடற்றொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம், … Read more

கல்வி, காணி,வீட்டு உரிமைகளை வழங்கி மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதார்களாக்குவோம்- ஜனாதிபதி

• கொழும்பு, கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகளுடன் ரன்திய உயன வீட்டுத்தொகுதி. • சீன நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 1996 வீடுகள் இரண்டு வருடங்களில் மக்களிடம் கையளிக்கப்படும். • மேலும் 50,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம். கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி.மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். … Read more

புத்தாண்டு சுபவேளை பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு 

தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய  முறைப்படி நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட சுபவேளை குறிப்புப் பத்திரமே இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சம்பிரதாய முறைப்படி  ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார். புத்தாண்டு பிறப்பு, புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு பற்றவைத்தல், உணவு உண்ணல், தலைக்கு எண்ணெய் … Read more

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan) உறுதியளித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் நேற்று (10) நடந்த தொலைபேசிக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன். விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார். … Read more

நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பரிந்துரைகளை அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபை முன்மொழிந்துள்ளது

பொது நலனுக்காக நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தைக் கட்டியெழுப்ப பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையின் பரிந்துரைகள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் (09) கையளிக்கப்பட்டது. சமயக் கல்வி பாரியளவில் கைவிடப்பட்டிருப்பதாகவும், அதனாலேயே சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டிய அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையின் பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர். பிரிவெனாக்களை ஆரம்பித்தல், அறநெறிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் … Read more

பாதுகாப்பு அமைச்சின் தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிப் பிரிவினால் பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் நேற்று (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை அளித்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புத்தாண்டு கொண்டாட்டம் பல பாரம்பரிய விளையாட்டுகளை உள்ளடக்கியிருந்ததோடு, பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களின் கலாச்சார அம்சங்களும் நிகழ்வை வண்ணமயமாக்கின. புத்தாண்டு விழா நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு பாதுக்காப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவால் … Read more