வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி திருமண அழைப்பிதழ் வடிவில் விழிப்புணர்வு பிரசுரங்கள் @ தருமபுரி 

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில், திருமண அழைப்பிதழ் வடிவில் அச்சிடப்பட்ட பிரசுரங்களை வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மக்களவை தேர்தலில் வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்கச் செய்யும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தருமபுரி மக்களவை தொகுதியிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more

திமுகவை ஏமாற்றினால் நீங்கள்தான் ஏமாந்து போவீர்கள்: உதயநிதி @ உசிலம்பட்டி தேர்தல் பரப்புரை

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று (மார்ச் 23) இரவு தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: உசிலம்பட்டி தொகுதி மக்கள் கடந்த 2019 எம்பி தேர்தலிலும், 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை ஏமாற்றிவீட்டீர்கள். இந்தமுறையும் உசிலம்பட்டி மக்கள் எங்களை (திமுகவை) ஏமாற்றுவீர்களா? உசிலம்பட்டி மக்களை நம்ப முடியவில்லை. அப்படி எங்களை ஏமாற்றினால் நீங்கள்தான் ஏமாந்துபோவீர்கள். காலையிலிருந்து ராமநாதபுரம், … Read more

அரசு நிர்வாகம் சுறுசுறுப்பு; அரசியல் கட்சிகள் சுணக்கம்: களைகட்டாத நெல்லை தேர்தல் களம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் தேர்தல் பணிகளில் அரசுத்துறை நிர்வாகங்கள் சுறுசுறுப்புடன் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினரினடையே சுணக்கம் காணப்படுகிறது. இதனால் தேர்தல் களம் களைகட்டவில்லை. திருநெல்வேலியில் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கா.ப. கார்த்திகேயன் தலைமையிலான அரசு அதிகாரிகள் குழுவினர் முடுக்கிவிட்டுள்ளனர். 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்டுவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்குச் சாவடிகளுக்கு வரமுடியாத நிலையிலுள்ள மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று … Read more

“தமிழகத்துக்கும் காஷ்மீர் நிலை ஏற்படலாம்” – திருவாரூர் பரப்புரையில் ஸ்டாலின் எச்சரிக்கை

திருவாரூர்: “காஷ்மீருக்கு ஐந்து ஆண்டுகளாக தேர்தல் கிடையாது. இப்போதுகூட, ஜம்மு – காஷ்மீருக்குத் தேர்தல் அறிவிக்கவில்லை. இதுதான் பாஜக பாணி சர்வாதிகாரம். இந்த நிலைமை நாளை தமிழகத்துக்கும் ஏற்படலாம். ஏன், பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இதே நிலைதான் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும்” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை தொனியில் பேசினார். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் ச.முரசொலியையும், … Read more

தமிழ்நாட்டில் 7 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்… யார் யார் மீண்டும் போட்டி?

TN Congress Candidates List 2024: மக்களவை தேர்தலுக்கான 4ஆம் கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 7 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.    

“பாஜகவுடன் பேரம் பேசி கூட்டணி அமைத்த பாமக” – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

மேட்டூர்: “பாமக வெவ்வேறு இடங்களுக்கு சென்றுதான் வருகிறது. காலையில் அதிமுக கட்சியுடனும், மாலையில் பாஜக கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இது கொள்கை கூட்டணி அல்ல. பேரம் பேசி கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள்” என வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேட்டூர்‌ அடுத்த நவப்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் இன்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி தலைமை தாங்கினார். … Read more

தூத்துக்குடி தமாக வேட்பாளராக விஜயசீலன் அறிவிப்பு

சென்னை: மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வேட்பாளராக எஸ்.டி.ஆர்.விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 தொகுதிகள் பாஜக கூட்டணியில் தமாகா போட்டியிடுகிறது. இதில் ஈரோடு தொகுதி வேட்பாளராக விஜயகுமார் அறிவிக்கப்பட்டிருந்தார். அதேபோல ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக … Read more

திமுக அதிமுக இடையே போட்டி… அண்ணாமலை ஜெயிக்க மாட்டார் – எஸ். பி. வேலுமணி தடாலடி

Coimbatore Election News : திமுக அதிமுக இடையேதான் போட்டி, ஆனால் திமுக வேட்பாளர் டம்மி என்றும்  கரூரில் நிற்காமல் அண்ணாமலை கோவையில் நிற்கிறார என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரச்சாரத்தில் அதிரடியாக பேசி உள்ளார். 

அதிமுக வேட்பாளர் மாற்றம்: நெல்லையில் சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி போட்டி

சென்னை: நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். புதிய வேட்பாளராக ஜான்சி ராணியை அறிவித்துள்ளது அதிமுக தலைமை. முன்னதாக, திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளும், ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்தது. திமுக துணை பொதுச் செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன் (35). கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்விகமாகக் கொண்ட இவர், பிறந்தது … Read more

சர்ச்சை கிளம்பியதும் உஷாரான இபிஎஸ் – நெல்லையில் வேட்பாளர் மாற்றம்… பின்னணி என்ன?

Tirunelveli AIADMK Candidate Changed: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.