“தமிழகத்தில் பாஜகவை கொண்டு வந்ததே திமுக தான்!” – சீமான் குற்றச்சாட்டு @ திண்டுக்கல்

திண்டுக்கல்: “கடந்த தேர்தலில் பாஜக வந்துவிடும் என்று திமுக கூறியதைக் கேட்டு பயந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் நாம் தமிழருக்கு வாக்களிக்காமல் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால், திமுக இப்போது பாஜக வந்துவிட்டது, பாஜக வந்துவிட்டது என்று கூறுகின்றனர். நாம் தமிழருக்கு வாக்களித்து இருந்தால், தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்குமா? வந்திருக்குமா? மக்கள் மறுபடியும் திமுகவுக்கு வாக்களித்தால் வளர்ந்துவிட்டது பாஜக என்று கூறுவார்கள்” என்று திண்டுக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். நாம் … Read more

“அன்று ஜெயலலிதா சட்டம் – ஒழுங்கை பாதுகாத்தது போலவே இன்று மத்தியில் மோடி ஆட்சி” – தினகரன் @ நெல்லை

திருநெல்வேலி: “இந்தியாவில் 3-வது முறையாக மோடி பிரதமராவது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்த விஷயம்” என்று திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமமுக பொதுசெயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி, தாழையூத்து பகுதிகளில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அவர் பேசியது: “பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு சிறந்த ஆட்சியை, மக்கள் விரும்புகின்ற ஆட்சியை தந்துள்ளார். இதனால் … Read more

TN Lok Sabha Election 2024: வேலூரில் திமுக வேட்பாளரிடம் சரமாரி கேள்வி

வேலூரில் திமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது ஐந்தாண்டுகளாக வரவில்லை ஏன் இப்போது வருகிறீர்கள் என ஒருவர் திடீரென கேள்வி கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

“என்னை வெற்றிபெறச் செய்தால் விஜயகாந்த் ஆத்மா சாந்தி அடையும்” – விஜய பிரபாகரன் பிரச்சாரம்

சிவகாசி: “மக்களவையில் தேமுதிக உறுப்பினர் இருக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் ஆசை. எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடையும்” என சிவகாசியில் நடந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார். சிவகாசி அருகே எரிச்சநத்தம், நடையனேரி, எம்.புதுப்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “உங்களை பார்த்து பேசுவது எனது சொந்தக்காரர்களிடம் பேசுவது போல் உள்ளது. நாம் அனைவரும் உறவினர்கள் தான். … Read more

மேற்கு தொடர்ச்சி மலையில் 3வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ!

Latest News Forest Fire In Western Ghats :  3ஆவது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை அனைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வனத்துறையினர் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள்.  

தமிழகத்தில் தேர்தல் களம் இறங்கிய கேரள ஜீப்கள்! – இது தேனி ஸ்பெஷல்

தேனி: தேனி தொகுதியில் ஏராளமான கேரள ஜீப்கள் பிரச்சாரத்துக்காக களம் இறக்கப்பட்டுள்ளன. ஜெனரேட்டருடன் மைக், ஸ்பீக்கர், திறந்தவெளி மேல்புறம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் பல கட்சியினரும் இந்த விஷயத்தில் ‘கூட்டணி அமைத்து’ கேரள ஜீப்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். தேர்தல்களில் கூட்டமும், ஆர்ப்பாட்டமும் தவிர்க்க முடியாததாகி விட்டது. தேனி தொகுதியைப் பொறுத்தளவில் போட்டியிடும் கட்சியுடன், கூட்டணி கட்சி நிர்வாகிளும், தொண்டர்களும் ஒன்று சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேனி தொகுதி பரபரப்பான நிலையில் உள்ளது. பிரச்சாரத்தைப் … Read more

விழுப்புரம்: அமைச்சர் செஞ்சி மஸ்தானை கண்டபடி திட்டிய அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் இக்தார் நோன்பு நிகழ்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மேடையிலேயே கடுமையாக திட்டி பொது இடத்தில் அசிங்கப்படுத்தினார்.

“கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாநிலத்துக்கு ஒரு கொள்கை” – செல்லூர் ராஜூ விமர்சனம்

மதுரை: “கம்யூனிஸ்ட் கட்சிகங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒரு கொள்கை வைத்துள்ளன” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார். மதுரை கே.கே.நகர் சுந்தரம் பூங்கா அருகே அதிமுக தேர்தல் அலுவலகத்தில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி தென்னிந்திய பொதுச்செயலாளர் அ.ஆனந்தன், அதிமுக பிரச்சாரத்துக்கு ஆதரவாக எழுதிய தேர்தல் பிரச்சாரப் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அந்தப் புத்தகத்தை வெளியிட்டார். அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் பெற்றுக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் முன்னாள் … Read more

அதானிக்காக இலங்கையிடம் பேசிய மோடியே மீனவர்களுக்காக பேசுனீங்களா? உதயநிதியின் 11 கேள்விகள்

Minister Udhayanidhi Stalin 11 Questions to Prime Minister Narendra Modi About Kachchatheevu: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ன ஆச்சு, கருப்பு பணத்தை மீட்பேன் என சொன்னது என்ன ஆச்சு? என்பது உள்ளிட்ட 11 கேள்விகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுப்பியுள்ளார்.

நாகை தொகுதியில் பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சி: இந்திய கம்யூ. புகார்

சென்னை: நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சி செய்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வை.செல்வராஜ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, அதன் மூலம் வாக்குகளை பெரும் முயற்சியில் … Read more