மன்னார் குடியில் தையல் கடையில் பயங்கர தீவிபத்து..! ரூ.20 லட்சம் மதிப்புடைய பொருட்கள் தீயில் கருகி நாசம் <!– மன்னார் குடியில் தையல் கடையில் பயங்கர தீவிபத்து..! ரூ.20 … –>

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தையல் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த ஆடைகள் எரிந்து நாசமாகின. ஆசாத் தெருவில் வசித்து வரும் சூரிய நாரயணன் என்பவரின் கடையில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் கடையில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான 28 பவர் தையல் மிஷின்கள், ஆடைகள் எரிந்து நாசமாகின. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. Source … Read more

நெருங்கி வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சுவர் விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சுவர்களில் தேர்தல் விளம்பரம் மற்றும் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகளை வைத்தல், கொடிகளை நாட்டுதல், சின்னங்களை வரைதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது. இதுதொடர்பான வரைமுறைகளை … Read more

தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா… 5,000-க்கு கீழ் சென்ற பாதிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. 33 நாள்களுக்கு பிறகு, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. நேற்று 4,519 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நான்கு வாரங்களுக்கு பிறகு 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. கொரானா மூன்றாம் அலை வேகம் எடுத்த போது, ஜனவரி 6ஆம் தேதி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. பின்னர், ஜனவரி 13 அன்று கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் … Read more

சூர்யா நடித்த ஜெய்பீம் படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது <!– சூர்யா நடித்த ஜெய்பீம் படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெ… –>

94 வது ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரைகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்ப்படமான ஜெய்பீம் இடம்பெறவில்லை. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் ஆஸ்கர் விருதுக்கு தகுதிப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆயினும் ஆவணப்பட பிரிவில் இந்தியாவை சேர்ந்த இயக்குனர்கள் ரின்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் இயக்கிய Writing with Fire என்ற ஆவணப்படம் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு ‘Belfast’, ‘CODA’, ‘Don’t … Read more

ஹிஜாப் விவகாரம்: பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது- கமல்ஹாசன்

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற கர்நாடக மாநில அரசின் உத்தரவு ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்திலமான தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வரக்கூடாது என்று அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினார். இதனிடையே, மாணவிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; கூட்டணி வைக்காமல், தனித்து களம் காணும் விஜய் மக்கள் இயக்கம்

Janardhan Koushik  Tamil Nadu: Thalapathi Vijay Makkal Iyakkam to not form alliance in civic polls: தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமாக இருந்த இந்த அமைப்பு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 129 இடங்களைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியை பதிவு செய்தது. விஜய் மக்கள் … Read more

தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு.!!

தமிழகத்தில் நாளை முதல்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  நாளை மற்றும் நாளை மறுநாள் : தென் தமிழக மாவட்டங்கள், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  12.2.2022 … Read more

மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்.. ஆந்திரா வாழ் தமிழர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் ரோஜா <!– மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்.. ஆந்திரா வாழ் தமிழர்க… –>

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்பாட புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் இலவசமாக வழங்க உள்ளது. முன்னதாக நகரி சட்ட மன்ற உறுப்பினர் ரோஜா தமிழக முதல்வரை சந்தித்து சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு, தமிழ்மொழி பாடதிட்டத்திற்காக 10,000 புத்தகங்கள் இலவசமாக வழங்க கோரிக்கை விடுத்திருந்தார். இதனையேற்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான ஆண்டுத்தமிழ் பாட நூல்கள் வகுப்பிற்கு தலா 1000 பிரதிகள் வீதம் இலவசமாய் வழங்க … Read more