ரஜினியை இயக்கப்போகும் அருண்ராஜா காமராஜ்..இது லிஸ்ட்லயே இல்லையே பா..! தயாரிப்பாளர் யார் தெரியுமா ?

நடிகர் ரஜினிகாந்த் இனி படங்கள் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் இருந்தது. வயது ஒருபக்கம், உடல்நிலை மறுபக்கம் என ரஜினியின் தற்போதைய நிலையை வைத்து ரசிகர்களுக்கு இந்த சந்தேகம் இருந்தது. எனவே இதையெல்லாம் பொய்யாக்கும் வகையில்
ரஜினி
தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அறிவித்தார்.

நெல்சனின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினியின் 169 ஆவது படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அறிவிப்பு கலக்கலான ப்ரோமோவின் மூலம் வெளியிடப்பட்டது.

ஸ்டைலாக ரஜினி கோட் சூட் போட்டுகொண்டு நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த புகைப்படம் ரஜினிக்கு இன்னும் வயசே ஆகவில்லை என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு படு மாஸாக இருந்தது. பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினி தான் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களையும் கொண்ட கதையை
நெல்சன்
கூறியதால் அவரை தேர்வுசெய்துள்ளார்.

ரஜினிக்கு திடிர்னு என்ன ஆச்சு..அவசரமாக அமெரிக்கா சென்ற ரஜினி.பதட்டத்தில் ரசிகர்கள்..!

தற்போது பீஸ்ட் படத்தில் பிஸியாக இருக்கும் நெல்சன் அப்படம் வெளியான பிறகு ரஜினியின் படப்பிடிப்பை துவங்குவார். இந்நிலையில் ரஜினியின் 170 ஆவது படத்தி யார் இயக்கப்போகிறார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல பாடகரும், நடிகரும், கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான
அருண்ராஜா காமராஜ்
ரஜினியின் 170 ஆவது படத்தி இயக்கப்போகிறார் என்ற செய்தி சமூகத்தளங்களில் செம வைரலாகிவருகிறது. தற்போது உதயநிதியை வைத்து நெஞ்சுக்கு நீதி படத்தை இயங்கிக்கொண்டிருக்கும் அருண்ராஜா சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை கூறியிருக்கிறார்.

அக்கதை ரஜினியை வெகுவாக ஈர்க்கவே தன் 170 ஆவது படத்தின் இயக்குனராக அருண்ராஜாவை தேர்வு செய்துள்ளார் ரஜினி. மேலும் இப்படத்தை தற்போது பரபரப்பாக பேசப்படும் தயாரிப்பாளரான
போனி கபூர்
தயாரிக்கிறார்.

வலிமை
படத்தை தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் இயக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். இந்நிலையில் ரஜினியை வைத்து அருண்ராஜா காமராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிப்பார் என்ற தகவல் வந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

பங்கர்ராஜு வெற்றி விழா : நன்றி தெரிவித்த இயக்குனர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.