வார்சா: ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டி மைதானத்தில் உக்ரைன் வீரரை ஆதரவுக் குரல்கள் நெகிழ்ந்து உதடு துடிக்க அழவைத்தன. ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்த அணிகளின் போட்டிதான் இந்த ப்ரீமியர் லீக் போட்டி.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் நடத்திக் கொண்டிருக்கிறது. போரை நிறுத்துமாறு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகர் தென் கொரியாவின் சீயோல் நகர் வரை போராட்டங்கள் நடந்து வருகின்றன. போர் எதற்கும் தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து உலக அரங்கங்களில் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், போலந்தில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியின் நடந்த சம்பவம் ஒன்று, உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
இதில் போலந்தின் பென்ஃபிகா அணிக்காக விளையாடுகிறார் உக்ரைன் வீரர் ரோமன் யரேம்சுக். நேற்று மைதானத்தில் பென்ஃபிகா அணி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் உக்ரைன் வீரர் ரோமன் யரேம்சுக் சப்ஸ்டிட்யூட்டாக அழைக்கப்பட்டார். மாற்று ஏற்பாடாக அழைக்கப்பட்ட ரோமனின் கையில் கேப்டன் ஆர்ம் பேண்டை டிஃபண்டர் ஜேன் வெர்டோகென் கட்டினார்.
இதை சற்றும் எதிர்பாராத யரேம்சுக் கண் கலங்கினார். அப்போது அரங்கம் முழுவதும் நிறைந்த மக்கள் உக்ரைன் கொடியை உயர்த்திக் காட்டியும், நாங்கள் உக்ரைனை ஆதரிக்கிறோம், போர் வேண்டாம் போன்ற பதாகைகளையும் உயர்த்திக் காட்டினர். மேலும், அரங்கிலிருந்த அனைவருமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வீரரை உற்சாகப்படுத்தினர்.
அந்த ஆதரவைப் பார்த்த ரோமன் யரேம்சுக் கண்கலங்கினார். ஒற்றுமையாக ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கு முதலில் அவரது கண்கள் கலங்கின, பின்னர் உணர்ச்சிப் பெருக்கில் அவரது உதடுகள் துடித்தன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் தங்களது ஆதரவை பதிவு செய்து வருகின்றனர்.
O momento da entrada do Yaremchuk. Arrepiante.
Vídeo: @enganjento pic.twitter.com/gR8cp9xuo0
— ÁREACHUK SLB (@areaslb) February 27, 2022