உக்ரைன் -ரஷியா போரால் எத்தனை கோடி பேருக்கு பாதிப்பு? -ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்த்து தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் தமது சொல் பேச்சை கேட்காததால் ஆத்திரமடைந்து அந்நாட்டின் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவரும் இந்த போரை நிறுத்தவதற்காக உக்ரைன் -ரஷியா இடையே பெலராசில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷியா ரவுண்ட் கட்டி அடித்து வருகிறது.

இருநாட்டு தலைவர்களுக்கு இடையேயும் நாளை இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஐ.நா.சபை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

பேசிக்கிட்டே உக்ரைன் அதிபருக்கு புதின் இழைத்த மாபெரும் துரோகம்!

‘உக்ரைன் -ரஷியா போரால் அந்த நாட்டில் இதுவரை 1.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உயிர், உடைமை, இருப்பிடம் என ஏதேனும் ஒன்றை இழந்து தவித்து வருகின்றனர். போரினால் பெரிதும் பாதி்க்கப்பட்டுள்ள உக்ரைனியர்களின் மறுவாழ்வுக்கு 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பணம் தேவைப்படுதிறது’ என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதலால், அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உயர்கல்வி, பணிநிமித்தம் காரணமாக உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்கள், அமெரிக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.