அப்போலோ புரோட்டான் சென்டருக்கு சிறப்பு மருத்துவர் நாளை வருகை| Dinamalar

புதுச்சேரி-சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் ரூபேஷ்குமார், நாளை புதுச்சேரிக்கு வருகை தந்து மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.புதுச்சேரி அண்ணா நகர் 14வது குறுக்குத் தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் நியூரோ சர்ஜரி சிறப்பு மருத்துவர் ரூபேஷ்குமார் நாளை 5ம் தேதி வருகை தருகிறார். காலை 9.௦௦ மணி முதல் மதியம் 2.௦௦ மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்தெலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.மேலும், தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்து வலி, முதுகுவலி, மறுத்துப் போதல், இதர நரம்பியல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை பெறலாம்.முன் பதிவிற்கு 9677133345, 7299062029 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.