வருகிற 5-ந் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.. <!– வருகிற 5-ந் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.. –>

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 5-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

மார்ச் மூன்றாவது வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்தும், அந்தந்த துறைகளுக்கான கோரிக்கைகள், நிதி ஒதுக்கீடு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும், நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.