துணை ராணுவத்துக்கு அதிநவீன ஆயுதங்கள் வாங்க 1,523 கோடி

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:ஒன்றிய பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட ஒன்றிய ஆயுத காவல் படைகளுக்கு அதிநவீன ஆயுதங்களை வாங்கவும், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1,523 கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆயுத படை நவீனமயமாக்கல் திட்டம் (4) இந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் 2026ம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலக்கட்டத்தில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.