உக்ரைனை தொடர்ந்து தைவானில் வெடிக்கும் பிராந்திய பிரச்சனை: அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா



ஆசிய பிராந்தியத்தில் தைவானை அமெரிக்கா ஆதரிப்பதன் மூலம், பசிபிக் பகுதியில் நேட்டோ அமைப்பின் கால்பதிக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பிரச்சனையை தைவானிவிற்கும் சீனாவிற்கும் இடையேயுள்ள பிரச்சைகளுடன் ஒப்பிடமுடியாது என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக்கு திட்டத்தின் மூலம் நேட்டோ அமைப்பின் செயல்களுக்கான ஆதரவு பதிலை ஆசிய பகுதியில் இருந்து பெற அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஒரே நாடு கொள்கையின் கீழ் தைவானை சீனாவின் ஒருபகுதியாக அமெரிக்கா அங்கீகரிக்காத நிலையில், தைவானுக்கு தொடர்ந்து பாதுகாப்பு உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை தேசிய செய்தி மாநாட்டில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, அமெரிக்கா தைவானுடனான உறவை தொடர்ந்து அதிகரித்து வருவதை சீனா நேரடியாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் தைவானின் உறவு மேம்பாடு என்பது தைவானுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவிற்கும் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி எச்சரித்துள்ளார்.

சிலர், உக்ரேனியப் பிரச்சினையில் இறையாண்மைக் கொள்கையைப் பற்றிக் குரல் கொடுக்கும்போது, ​​தைவான் பிரச்சினையில் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள்.

அதேசமயம் அமெரிக்காவின் இந்த தலையீடு பிராந்திய வளர்ச்சி மற்றும் ஒற்றுமையிம் சீர்குலைக்கும் எனவும்,  பிளாக் கூட்டணிகள் மூலம் சீனாவின் வளர்ச்சியை அடக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா முன்பே குற்றம் சாட்டி இருந்தது.

மேலும் ரஷ்யா உடனான சீனாவின் உறவை குறித்து பேசும் போது உலகின் மிக முக்கியமான இருதரப்பு உறவுகளில் ஒன்று” என்று வாங் குறிப்பிட்டார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.