ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை காவலர் ஒருவர் அடித்து இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
காவல் உதவி ஆய்வாளர் வெங்கடரமணா, மர்ரிபாடு கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மாஸ்க் அணியததால், அவரை தாக்கியதோடு சட்டையைப் பிடித்து தரதரவென காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.
இதனை அங்கிருந்த நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் வெளியிட்டுள்ளனர்.