தங்கம் விலை ரூ.3800 மேல் உச்சத்தில் இருந்து வீழ்ச்சி.. இனியும் குறையுமா.. வாங்க சரியான இடமா..?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தொடர்ந்து இன்றும் சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது மீண்டும் தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றத்தினைக் கண்டு வந்த நிலையில், மீண்டும் குறைந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

தடுமாறும் சென்செக்ஸ்.. பங்குச்சந்தையை வாட்டும் 3 முக்கியப் பிரச்சனை..!

எனினும் இந்த சரிவானது தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

இன்றும் நாளையும் நடக்கவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், டாலரின் மதிப்பு மேலும் வலுவடையலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மத்திய வங்கியின் முடிவினை கருத்தில் கொண்டு, தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளன.

பத்திர சந்தை ஏற்றம்

பத்திர சந்தை ஏற்றம்

தொடர்ந்து பத்திர சந்தையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், அதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது இனி வரும் நாட்களிலும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்னும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கவனிக்க வேண்டிய முக்கிய காரணி
 

கவனிக்க வேண்டிய முக்கிய காரணி

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து ஏற்றத்தினையே கண்டு வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணலாம் என்றே நிபுணர்களும் கணித்து வருகின்றனர். எனினும் கடந்த இரண்டு- மூன்று அமர்வுகளாகவே தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது. நிலவி வரும் உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, இனியும் நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு இது ஆதரவாக அமையலாம். இதற்கிடையில் தான் சர்வதேச அளவில் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையினை முதலீட்டாளர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

பணவீக்கம்

பணவீக்கம்

உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சமீபத்திய வாரங்களாக உச்சத்தினை எட்டிய நிலையில், தற்போது சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. இது சப்ளை சங்கியில் பாதிப்பு ஏற்படலாமோ என்ற அச்சத்தின் மத்தியில், பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகத்தினையும் முறித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளன. இதற்கிடையில் பல்வேறு நாடுகளும் விலையினை கட்டுக்குள் கொண்டு வர உற்பத்தியினை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கிடையில் சற்றே தணிந்துள்ள கச்சா எண்ணெய் விலையானது சற்றே ஆறுதலாக அமைந்துள்ளது. இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 ரூ.3800-க்கு மேல் சரிவு

ரூ.3800-க்கு மேல் சரிவு

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு முந்தைய வாரத்தில் அதிகபட்சமாக 55,558 ரூபாயாக உச்சம் தொட்டது. இதே இன்று 51,668 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 3,800 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டு காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைக்கும் வர்த்தகர்களுக்கு இது சரியான வாய்ப்பு தான் என்றாலும், இன்னும் குறையும்பட்சத்தில் வாங்கினால் இன்னும் லாபகரமானதாக இருக்கலாம்.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

சர்வதேச மற்றும் இந்திய சந்தை என இரண்டிலும் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. நாளை அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பு வரும் நிலையில், இது தொடரலாம் என்றும், பெரியளவில் ஏற்றம் காண வாய்ப்பில்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலை குறையும்போது வாங்கி வைக்கலாம்.

 சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்றும் பலத்த சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 24.95 டாலர்கள் அல்லது 1.27% குறைந்து, 1935.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக இது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1% மேலாக குறைந்து, 25.030 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 684 ரூபாய் குறைந்து 51,624 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வில் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 869 ரூபாய் குறைந்து, 67,957 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று இரண்டாவது நாளாக குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 4819 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, 38,552 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து, 5257 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து, 42,056 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,570 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.40 பைசா குறைந்து, 72.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 728 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1400 ரூபாய் குறைந்து, 72,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இன்றும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. இதே நீண்டகால நோக்கிலும் சற்று பொறுத்திருந்து வாங்கினால் இன்னும் லாபம் கூடுதலாக கிடைக்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on march 15th 2022: gold prices fall, down Rs.3800 above in recent high

gold price on march 15th 2022: gold prices fall, down Rs.3800 above in recent high/தங்கம் விலை ரூ.3800 மேல் உச்சத்தில் இருந்து வீழ்ச்சி.. இனியும் குறையுமா.. வாங்க சரியான இடமா..?

Story first published: Tuesday, March 15, 2022, 12:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.