மகா லட்சுமி எப்படி தோன்றினார், ?   விஷ்ணு பகவானை எப்படி அடைந்தார்.?

மகா லட்சுமி எப்படி தோன்றினார், ?   விஷ்ணு பகவானை எப்படி அடைந்தார்.?

மும்மூர்த்திகளில் ஒருவரான மகா விஷ்ணுவின் துணைவியாக இருக்கும் செல்வத்திற்கான கடவுள் மகா லட்சுமி எப்படி தோன்றினாள். லட்சுமி தேவியை விஷ்ணு மணந்த புராணக் கதை இதோ.

இறவா வரத்தின் மீதான ஆவல்: முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், மனிதர்களைப் போல நரை, திரை, மூப்பு, சாக்காடு ஆகியவை இருக்கின்றன.  இதிலிருந்து தேவர்கள் விடுபட வேண்டும் என நினைத்தார்கள். தேவர்களின் தலைவராகிய இந்திரன் அதிலிருந்து விடுபட வேண்டி பிரம்மனிடம் முறையிட்டனர். ஆனால் அவரோ நானும் திரை எனும் இரண்டாவது கட்டத்திற்கு வந்துவிட்டேன் என நினைக்கின்றேன். அதனால் மகா விஷ்ணுவிடம் முறையிட்டால் அதற்குத் தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.

பாற்கடல் கடைதல்:

மகாவிஷ்ணுவிடம் முறையிட்டபோது, கவலைப்பட வேண்டாம். இந்த பாற்கடலில் அமிர்தம் இருக்கின்றது. நாம் இந்த பாற்கடலைக் கடைந்தால் அதைப் பெற முடியும் என்றார். அந்த அமிர்தத்தை அருந்தினால் நாம் நரை, திரை, மூப்பு, சாக்காடு ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும். இதையடுத்து ஆலோசனை நடந்தது. தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைவது இயலாதது.

அதனால் அசுரர்களின் உதவியை நாட வேண்டும் என விஷ்ணு தெரிவித்தார்.  பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுக்க மேருகிரி மலையை மத்தாகவும், வாசுகி பாம்பு கயிறாகவும் வைத்துக் கடைந்தனர்.

மகா லட்சுமி தோன்றுதல்:

ஆயிரம் ஆண்டுகள் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கயிறாக இருந்த வாசுகி நாகம் வலி தாங்க முடியாமல் விஷத்தைக் கக்கியது. அப்படி கடலில் திரண்டு வந்த ஆலகால விஷத்தைச் சிவ பெருமான் அருந்தி, அதை தன் கழுத்தில் நிறுத்தினார், விஷத்தால் நீலகண்டரானார். கடைசியாக அந்த கடலிலிருந்து அமிர்தம் வெளிவருவதற்கு முன், பல்வேறு பொருட்கள் வெளி வந்தன.

சிந்தாமணி, சூடாமணி, கௌத்துவ மணி, மூதேவி, ஸ்ரீதேவி, அகலிகை, காமதேனு, கற்பக மரம், துளசி ஆகியவை தோன்றியது.

பாற்கடலைக் கடைந்தவர்கள் எல்லாம் ஆளுக்கொரு பொருளை எடுத்துக் கொள்கின்றனர். அப்படி அதிலிருந்து வெளியே வந்த ஸ்ரீதேவியான மகா லட்சுமியை ஆட் கொண்டு அவரை மணம் புரிந்து, மகாலட்சுமி சமேத மகா விஷ்ணுவாக அருள்பாலிக்கிறார்.

கௌத்துவ மணியைத் தான் திருமால் தனது மார்பில் அணிந்திருக்கின்றார். இப்படி அலை கடலிலிருந்து தோன்றியதால், மகாலட்சுமிக்கு அலை மகள் எனப் பெயர் வந்தது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.