அமெரிக்காவில் 6 பேர் பலி| Dinamalar

கலிபோர்னியா-அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாக்ரமென்டோ நகரில் உள்ள ஒரு தெருவில் நேற்று காலையில் துப்பாக்கிச் சூடு நடந்த ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மக்கள் பதறியடித்து ஓடுவதும், துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.இது குறித்து போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாக்ரமென்டோ நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த ஒன்பது பேரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். விசாரணை நடத்தி வருகிறோம்’ என கூறப்பட்டுள்ளது.தாக்குதல் நடத்தியது யார், இறந்தது யார் என்ற விபரங்களை போலீசார் வெளியிடவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.