இ-அலுவலக முறைக்கு மாறும் தலைமைச்செயலகத்தின் 40 துறைகள்!

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் நடைபெற்று வரும் பணிகளில் முதற்கட்டமாக முதலமைச்சர் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட 8 துறைகளின் அலுவலகங்கள் இ ஆபிஸ் முறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
TNeGA - Tamil Nadu e-Governance Agency - YouTube
அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பழைய கோப்புகளை இணையத்தில் பதிவேற்றும் பணியில் 25 ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். அரசு அமைப்புகள், முக்கிய அலுவலகங்கள் என 500க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இ-அலுவலகமாக்கும் பணிகள் 6 மாதங்களுக்குள்ளாக முடிவடையும் என எதிர்பார்பக்கப்படுகிறது.
தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? - மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை | MK Stalin meeting with medical experts - hindutamil.in
Work from Anywhere என்ற முறையில் எங்கிருந்தும் பணியாற்றும் வசதியின் காரணமாக, பேரிடர் காலங்களிலும் அலுவலகப்பணிகளை மேற்கொள்ள முடியும். இ அலுவலகம் குறித்த சந்தேகங்களுக்காக ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கும் பணிகளும் தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. இதுதான் இனி எங்கள் அலுவலகம், மகிழ்ச்சியான மனித வளம், Digital Tamilnadu என கணினி மயமாக்கப்பட்ட படங்கள் தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஒட்டப்பட்டுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.