உக்ரைனின் புச்சா நகரத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைனின் கிவ் பிராந்தியத்தில் உள்ள புச்சா நகரில் வீதியில் காணப்படும் உடல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கிவ் பிராந்தியத்தில் உள்ள புச்சா நகருக்கு  சென்று பார்வையிட்ட போது, அங்கு ரஷ்ய துருப்புக்களிடமிருந்து மீட்கப்பட்ட  அந்த பிரதேசத்தில்  சாலையில் கிடக்கும் சடலங்கள், படுகொலைகள் நடத்தப்பட்டதற்கு சாட்சியாக இருப்பதாக குறிப்பிட்டார்

புச்சா நகரில் என்ன நடந்தது என்பதை உலகிற்குக் காட்ட வேண்டும் என்பதற்காக அங்கு சென்றிருப்பதாக ஸெலென்ஸ்க்கி குறிப்பிட்டார். படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்களை உலகிற்குக் காட்டும் வரை உக்ரைன் அமைதியாக இருக்காது என்று அவர் சொன்னார்.

பின்னர், புச்சாவில் இருந்து தேசிய தொலைக்காட்சியில் Zelenskiy பேசினார், மேலும் உக்ரேனில் ரஷ்ய துருப்புக்கள் நடத்திய அட்டூழியங்கள் குறித்து ( Kyiv) அறிந்துள்ள நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது  என்பது இப்போது கடினமான ஒன்றாகி விட்டது என்று கூறினார்.

“இவை போர்க்குற்றங்கள். இதை உலகம் இனப்படுகொலை என்று அங்கீகரிக்க வேண்டும்,” என்று Zelenskiy கூறினார்.

மேலும் படிக்க | உக்ரைனின் லிவிவ் நகரை தாக்கிய ரஷ்ய ஏவுகணை; பற்றி எரியும் எரிபொருள் கிடங்கு!

“ரஷ்ய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கான செயல்முறையை நீண்ட நேரம் இழுத்துச் செல்கிறது.  போர் நிலவும் இந்த சூழ்நிலையில் இது ஏற்கத்தக்க தல்ல” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

“ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சித்திரவதை செய்யப்பட்ட,  உடல்  துண்டிக்கப்பட்டுள்ளனர்.  பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.  குழந்தைகள் இரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர்,” என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார்.

Zelenskiy பேசிய பிறகு, உக்ரேனிய அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை குழந்தைகளுக்கான கோடைகால குடியிருப்பு என  கூறப்படும் இடத்தின் அடித்தளத்திற்கு அழைத்துச் சென்று கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் இருந்த ஐந்து ஆண்களின் உடல்களைக் காட்டினார்கள்.

மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் எப்போதும் பச்சை நிற டி-ஷர்ட்டில் உலா வரும் காரணம் என்ன..!!

உக்ரேனிய துருப்புக்கள் நகரத்தை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முன்னர், சிவில் உடைகளை அணிந்திருந்த ஐந்து பேரும் ரஷ்ய படையினரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் வீரர்கள் கட்டிடத்திற்குள் முகாம் அமைத்து மூன்று வாரங்கள் தங்கியிருந்ததாக அவர் கூறினார். புச்சா நகரில் நடத்தப்பட்ட படுகொலைக்கு எதிராக உலக அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா அந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது.

திங்களன்று செய்தியாளர்களிடம் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “இந்த தகவல் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்.

“நாங்கள் பார்த்தவற்றிலிருந்து, எங்கள் நிபுணர்கள் ஆராய்ந்ததில், வெளியாகியுள்ள வீடியோ திரிக்கப்பட்டுள்ளது எனவும் போலியாக இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது,” என்றும் ரஷ்ய கிரெம்ளின் அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையில், செவ்வாயன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றுவேன் என்று ஜெலென்ஸ்கி கூறினார். செவ்வாய் கிழமை பாதுகாப்பு கவுன்சில் அமர்வு, புச்சாவில் ரஷ்ய படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பான உக்ரேனிய குற்றச்சாட்டுகளை பரிசீலிக்க உள்ளது.

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.