தமிழகத்தில் தாமரையின் மலர்ச்சிஉறுதி செய்யப்பட்டு விட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய நாட்டில் நிலையற்ற தன்மை நிலவியபோது, ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியோடு தொடங்கப்பட்ட ஓர் இயக்கம்.இன்று உள்நாட்டில் வெற்றிகளையும், வெளிநாட்டில் நன்மதிப்பையும் பெற்று வருகிறது.
நரேந்திர மோடியின் நல்லாட்சிக்கு தந்த பரிசாக தமிழகத்திலும் தற்போது பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தாமரையின் மலர்ச்சி உறுதி செய்யப்பட்டு விட்டது. இனி தாமரையின் வளர்ச்சி மற்றும் பிரதமர் மோடியின் நல்லாட்சியை தமிழகத்திலும் நடத்திக் காட்ட வேண்டியது நம்கடமை. ஸ்தாபகர் தினத்தில் நாம்அதற்கான உறுதிமொழியைஎடுத்துக்கொள்வோம். அடுத்துவரும் 15 நாட்கள் மத்திய தலைமை நமக்காக வகுத்து கொடுத்திருக்கும் திட்டங்களை எல்லாம் ஆர்வத்துடனும் கவனத்துடனும் செய்து முடிப்போம்.
அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கு இந்த 2 வார நிகழ்ச்சிகள் இன்றியமையாதது. எனவே, ஒவ்வொரு மாவட்ட தலைவரும், மண்டல் தலைவர்களும் இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தங்கள் பகுதிகளில் மிக தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
ஏப்ரல் 6-ம் தேதி பாஜகவின் ஸ்தாபகர் தினத்தில் நாட்டுப்பற்று,தேச ஒற்றுமை, சமூக நீதி,பொருளாதார மேம்பாடு, ஊழல் எதிர்ப்பு, ஒழுக்கம் ஆகியவற்றை முன்னிறுத்தும் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், அதன்கொள்கைகளுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.