கட்டண கழிப்பறையை டெண்டர் எடுத்த ஊழியர்; நடவடிக்கை எடுக்க தங்கவயல் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்| Dinamalar

தங்கவயல் : ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலைய கட்டண கழிப்பறையை நகராட்சி கையகப்படுத்தவும், விதிமுறை மீறி டெண்டர் எடுதத நகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவும் தங்கவயல் நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.தங்கவயல் நகராட்சி சிறப்பு கூட்டம் நேற்று காலையில், நகராட்சி தலைவர் முனிசாமி தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில் நடந்த விவாதம்:நகராட்சி ஆணையர் நவீன் சந்திரா: ராபர்ட்சன்பேட்டை நகராட்சி பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறை குறித்து நீதிமன்றத்தில் ஒருவர் தடை வாங்கியுள்ளார்.

இந்த தடையை அகற்றி நகராட்சி கையகப்படுத்த, ஒப்புதல் அளிக்க வேண்டும்.சட்டத்துக்கு உட்பட்டதல்லநகராட்சி தலைவர் முனிசாமி: நகராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவரே, கட்டண கழிப்பறை டெண்டர் எடுத்து நடத்தி வருகிறார். இது சட்டத்துக்கு உட்பட்டதல்ல. டெண்டர் காலம் முடிந்து இரண்டாண்டு ஆகிறது.நகராட்சிக்கு கழிப்பறை மூலம் வருமானம் வரவில்லை. கட்டண கழிப்பறை நகராட்சியின் சொத்து. கட்டண கழிப்பறையை நடத்துபவர், நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கியுள்ளார்.சுயே., – பிரவீன் குமார்: கட்டண கழிப்பறையை டெண்டர் எடுத்தவர் நகராட்சி ஊழியர் என்பது யாருக்கும் தெரியாமல் போனதா; அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.தலைவர்: இதற்கு முன் பதவியில் இருந்தவர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் செய்ய தவறியுள்ளனர். எனவே ஆலோசித்து தீர்மானிக்க வேண்டும்.பிரவீன்: கழிப்பறை மூலம் நகராட்சிக்கு எந்த வருமானமும் வரவில்லை என தெரியும் போது, அதற்கான இழப்பீட்டை, கட்டண கழிப்பறையை நடத்துபவரிடமே வாங்கலாமே.நவீன கழிப்பறைஆணையர்: சுலப் இண்டர்நேஷனல் நிறுவனத்தினர் 15 லட்சம் ரூபாய் செலவில் நவீன கழிப்பறையாக மாற்றி பராமரிக்க கோரியுள்ளனர்.

தலைவர்: சுலப் நிறுவனத்தார், ‘ஹைடெக்’ கழிப்பறையாக பராமரிக்க முன் வந்ததால், அவர்களுக்கு வழங்க நகராட்சி முன் வந்தது. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டுள்ளது.நகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்து கழிப்பறையை கையகப் படுத்த சட்டத்தில் இடம் உள்ளது.மார்க்., கம்யூ., – தங்கராஜ்: நீதிமன்றத்தில் தடையுள்ள போது, அதனை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதா?ஆணையர்: இடைக்கால தடையில் நகராட்சி கவுன்சில் மேற்கொள்ளும் தீர்மானத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். பின் நீதிமன்ற உத்தரவின் படி அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கலாம்.

காங்., – ரமேஷ் ஜெயின்: நகராட்சி பஸ் நிலைய கழிப்பறை டெண்டர் எப்போது முடிந்தது; அதை ஏன் நகராட்சி கையக படுத்தாமல் விட்டு வைத்தது? முதலில் அதனை கையகப் படுத்தும் வேலையை செய்யுங்கள். பிறகு யாருக்கு வழங்குவது என்பதை யோசிக்கலாம்.ராபர்ட்சன்பேட்டை கட்டண கழிப்பறையால் நகராட்சிக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.வேலை நீக்கம் தலைவர்: அதற்காக தீர்மானம் கொண்டு வரலாம். கழிப்பறை டெண்டர் எடுத்துள்ளது நகராட்சி ஊழியர். அவர் மீது நடவடிக்கை எடுத்து வேலை நீக்கம் செய்யலாம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.