சபரிமலையில் ரூ.4.38 கோடி காணிக்கை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 10ம்தேதி  திறக்கப்பட்டது. மறுநாள் (11ம் தேதி) முதல் 18ம் தேதி வரை 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் குறைந்ததால் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனம் செய்தனர். இந்த நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன் மூலம் கோயில் வருமானமும் அதிகரித்தது. நடை திறக்கப்பட்டிருந்த 8 நாட்களில் மொத்தம் ரூ.10.15 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. சித்திரை விஷு தினத்தன்று காணிக்கை மூலமாக மட்டும் ரூ.4.38 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.