கிரே மார்கெட்டில் பிரீமியம் 50% சரிவு.. ஐபிஓ-ல் 3வது நாளும் களை கட்டிய எல்ஐசி!

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடானது இன்று வெற்றிகரமாக மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

மூன்றாவது நாளின் முடிவில் மொத்தம் 1.38 மடங்கு விண்ணப்பத்தினை பெற்றுள்ளது. அதேசமயம் கிரே மார்கெட்டில் பிரீமியம் சரிவினைக் கண்டுள்ளது.

இது 16.02 கோடி ஈக்விட்டி பங்குகளுக்கு எதிரான, 22.34 கோடி பங்குகளுக்கு விண்ணப்பத்தினை பெற்றுள்ளது.

எல்ஐசி ஐபிஓ மாபெரும் வெற்றி.. 100% பங்குகள் விற்பனை.. கல்லா கட்டியது மத்திய அரசு..!

 3வது நாள் விண்ணப்பம்

3வது நாள் விண்ணப்பம்

3வது நாளிலும் பாலிசிதாரர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. பாலிசிதாரர்கள் 4.01 மடங்கு விண்ணப்பத்தினையும், ஊழியர்கள் 3.06 மடங்கும், சில்லறை முதலீட்டாளர்கள் ஓதுக்கீட்டில் 1.23 மடங்கும், இதே தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு 56%மும், இதே அன்னிய முதலீட்டாளர்கள் 75 சதவீதமும் விண்ணப்பத்தினை பெற்றுள்ளது.

 ஞாயிற்று கிழமையும் விண்ணபிக்கலாம்

ஞாயிற்று கிழமையும் விண்ணபிக்கலாம்

எல்ஐசி IPO தொடங்கியுள்ள நிலையில முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மே8ம் தேதி அதன் அனைத்து கிளைகளும் வழக்கம்போல இயங்கும் என அறிவித்துள்ளது. ஆக இதன் மூலம் ஞாயிற்று கிழமையும் கவலையில்லாமல் ஐபிஓவுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 கிரே மார்கெட்டில் சரிவு
 

கிரே மார்கெட்டில் சரிவு

ஒருபுறம் ஐபிஓ களை கட்டி வரும் நிலையில், மறுபுறம் கிரே மார்க்கெட்டில் பிரீமியம் 50% சரிவினைக் கண்டு, 42 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பு நிறுவனம் கிரே மார்கெட்டில் பிரீமியம் 85 ரூபாயாக நிர்ணயம் செய்திருந்தது.

கிரே மார்கெட் என்றால் என்ன?

கிரே மார்கெட் என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனைக்காகப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்பாகவே, வேறு வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுப் பங்கு விற்பனை நடைபெற்றால் அதனை இணையான பங்குச் சந்தை, ஆங்கிலத்தில் கிரே மார்க்கெட் (Grey Market) என்று கூறுவார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC IPO day 3rd day: Total subscription at 1.38 times

LIC IPO day 3rd day: Total subscription at 1.38 times / கிரே மார்கெட்டில் பிரீமியம் 50% சரிவு.. ஐபிஓ-ல் 3வது நாளும் களை கட்டிய எல்ஐசி!

Story first published: Friday, May 6, 2022, 20:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.