பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். மாநிலம் முழுக்க பல முக்கிய இடங்களில் இன்று (19) தமிழக காங்கிரஸ் கட்சியினர் சார்பாக வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.
பெரும் போராட்டம் மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்ட்டார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.சிறையில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விடுதலை செய்ய சொல்லி ஏன் யாரும் குரல் எழுப்பவில்லை. அவர்கள் எல்லாம் தமிழர்கள் கிடையாதா?. பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து முக்கியமான இடங்களில் காலை 10 – இரவு 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.