Tamil Nadu News Updates: சென்னையில் பாஜக நிர்வாகி பாலசந்தர் கொல்லப்பட்ட வழக்கில் ரவுடி பிரதீப் மற்றும் கூட்டாளிகள் கைது. பிரதீப், சகோதரர் சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகிய 4 பேரை எடப்பாடியில் கைது செய்தது தனிப்படை போலீஸ்
பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகை
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு. தமிழகத்தில் ரூ31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி வைக்கிறார்.மோடி வருகையையொட்டி, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு. சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் . சென்னையில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தல் – அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர் தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிப்பு. வேட்பாளர்களை அறிவித்து ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63க்கும், டீசல் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.
லக்னோவை வீழ்த்தியது ஆர்சிபி
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது ஆர்சிபி. வெள்ளிக்கிழமை நடைபெறும் 2ஆவது தகுதிச் சுற்றுப்போட்டியில் ராஜாஸ்தானை பெங்களூரு எதிர்கொள்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று. இதுவரை 160 பேரை பரிசோதித்ததில் 11 பேருக்கு தொற்று உறுதி
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் ஈ.வெ.ரா சாலை, புரசைவாக்கம் தாசபிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு வரை, அண்ணாசாலை, எஸ்வி பட்டேல் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு. இந்த சாலைகளுக்கு பதிலாக மாற்று வழியில் செல்ல காவல் துறை அறிவுறுத்தல்
சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம். ஏற்கனவே சென்னை ஆட்சியராக பதவி வகித்த விஜயராணி ஐஏஎஸ்-க்கு பதிலாக புதிய ஆட்சியரை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு
சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம். சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு