உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டு முழுவதும் வாங்கியதை விட 3 மடங்கு அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் 34 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை மூன்றே மாதங்களில் இந்தியா பெற்றுள்ளது.
ஏப்ரலில் 7.2 மில்லியன் பீப்பாய் அளவிலான கச்சா எண்ணெய் பெற்ற நிலையில், இந்த மாதம் 24 மில்லியன் பீப்பாய்களுக்கும் மேல் கச்சா எண்ணெயை இந்தியா பெற்றுள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் சுமார் 28 மில்லியன் பீப்பாய்களைப் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.