அப்ரைசல் நேரத்தில் 250 பேர் பணி நீக்கம்.. ஊழியர்கள் கண்ணீர்..!

ஐடி துறையினை சேர்ந்த நிறுவனமான ஃபார்ஐ (FarEye) சுமார் 250 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐடி துறையில் கொரோனாவின் வருகைக்கு பிறகு வேலை வாய்ப்புகள் என்பது மிகப்பெரியளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் அதிகரித்து வரும் அட்ரிஷன் விகிதம் என்பது மிக மோசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

எனினும் இன்றளவில் சிறிய மட்டத்தில் உள்ள நிறுவனங்கள் சில சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. அதற்கு சிறந்த உதாரணமே இந்த பதிவு.

அடுத்த சர்ச்சையில் சிக்கும் விஷால் கார்க்.. நினைவிருக்கா.. ஒரே ஜூம் காலில் 900 பேரை பணி நீக்கம்!

மறுசீரமைப்பு நடவடிக்கை

மறுசீரமைப்பு நடவடிக்கை

சாப்டேவேரை சேவையாக வழங்கி வரும் இந்த ஃபார்ஐ, மாறி வரும் சந்தை நிலையை கருத்தில் கொண்டு, அதன் மறுசீரமைப்பு பணியினை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆக அதன் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கையினையும் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக கவனம் எங்கு?

அதிக கவனம் எங்கு?

தற்போது ஐடி சந்தையானது மீண்டும் மெதுவாக தொடங்கியுள்ள நிலையில், நிறுவனங்கள் மார்ஜினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் வாடிக்கையாளார்கள் விரும்பும் பகுதிகளில் எங்களது முயற்சிகளை சீரமைப்பதில் கவனம் செலுத்துகிறோம் என இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி குஷால் நஹாடா தெரிவித்துள்ளார்.

எதில் கவனம்
 

எதில் கவனம்

நிறுவனம் அதன் திறன்களை வலுப்படுத்துகிறது. தயாரிப்புகளில் வேறுபாடு மற்றும் ஆட்டோமேஷனில் ஆழ்ந்த கவனத்தை செலுத்துகிறது. மொத்தத்தில் செயல்பாடுகளை நிர்வகிக்க தேவையான முயற்சியை மேம்படுத்துகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையினை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமான சொத்துகள்

முக்கியமான சொத்துகள்

எங்களின் முக்கியமான சொத்துகளில் எங்களது ஊழியர்கள் உள்ளனர். ஆனாலும் இது ஒரு கடினமான காலமாகும். நாங்கள் எங்கள் செயல்பாடுகளையும், எங்கள் குழுவிலும் சிலரை குறைக்க சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என நஹாடா தெரிவித்துள்ளார்.

இகாமர்ஸ்களுக்கு சாப்ட்வேர்

இகாமர்ஸ்களுக்கு சாப்ட்வேர்

தற்போது இ- காமர்ஸ் நிறுவனங்களுக்கு சாப்டேரினை வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். இப்போது எங்களின் முன்னுரிமையே எங்களிடம் இருந்து பிரிந்து செல்பவர்களுக்கு சரியான உரிமைகளை அளித்து ஆதரவை வழங்குவது தான் என கூறியுள்ளார்.

பணிபுரிய சிறந்த இடம்

பணிபுரிய சிறந்த இடம்

ஃபார் ஐ நிறுவனம் 2020 – 21ம் ஆண்டில் 180% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றது. இது கடந்த 2019ல் பணிபுரிய சிறந்த இடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில்; நொய்டாவில் செயல்பட்டு வருகின்றது. இது பல நாடுகளிலும் செயல்பட்டும், இந்த பணி நீக்கம் எங்கு என தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

FarEye Lays off250 employees at time of appraisal

IT company FarEye has reportedly laid off around 250 employees.

Story first published: Sunday, June 12, 2022, 12:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.