மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை சட்டை இல்லாமல் பார்க்க சகிக்காது.. தன்னை கிண்டலடித்த தலைவர்களுக்கு புடின் பதிலடி..!

ரஷ்ய அதிபர் புடின் சட்டை அணியாமல் போஸ் கொடுத்ததை பிரிட்டன் மற்றும் கனடா நாட்டு பிரதமர்கள் கிண்டலடித்திருந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சட்டை அணியாவிட்டால் அவர்களை பார்க்க சகிக்காது என விளாடிமிர் புடின் விமர்சித்துள்ளார்.

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டின் போது, புடினை விட நாம் கடுமையானவர்கள் என்பதை உலகிற்கு காட்ட அவரைப்போலவே சட்டை அணியாமல் குதிரை சவாரி செய்ய வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கிண்டலடித்திருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.