ஜூன் மாதம் இந்தியாவின் நிலை இதுதான்.. வேலைவாய்ப்பு சந்தை மோசம்..!

சர்வதேச சந்தையின் தாக்கத்தால் இந்திய பொருளாதாரம், வர்த்தகம், முதலீட்டுச் சந்தை, வேலைவாய்ப்பு எனப் பல துறைகள் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.குறிப்பாக வல்லரசு நாடுகளில் நிலவிவரும் ரெசிஷன் அச்சம் பெரும் பாதிப்பை இந்தியாவுக்கு உருவாக்கி வருகிறது.

ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!

இந்தச் சூழ்நிலையில் ஜூன் மாதத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை, சேவைத்துறை பிஎம்ஐ குறியீடு, ரூபாய் மதிப்பு, வர்த்தகப் பற்றாக்குறை தரவுகள் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பின்மை விகிதம்

வேலைவாய்ப்பின்மை விகிதம்

சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி (CMIE) அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் படி நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது மே மாதத்தில் 7.12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புற நகர்ப்புற வேலையின்மை

கிராமப்புற நகர்ப்புற வேலையின்மை

கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பால் ஜூன் மாதத்தில் பெரும் பாதிப்புக்கு வழிவகுத்துள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவீடு மே மாதத்தில் 6.62 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதத்தில் 8.03 சதவீதமாக உயர்ந்தது. அதே நேரத்தில் நகர்ப்புற வேலையின்மை ஜூன் மாதத்தில் 8.21 சதவீதத்திலிருந்து 7.30 சதவீதமாகக் குறைந்துள்ளது.

390 மில்லியன் வேலைவாய்ப்புகள்
 

390 மில்லியன் வேலைவாய்ப்புகள்

CMIE தரவுகளின்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை 8 மில்லியனாக அதிகரித்து ஜூன் மாதத்தில் 13 மில்லியன் குறைந்து 390 மில்லியனாக உள்ளது. இந்த மாதத்தில் கிட்டத்தட்ட 13 மில்லியன் வேலைகள் இழக்கப்பட்டாலும், தொழிலாளர் சந்தையில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் மட்டுமே உயர்ந்துள்ளது என்று CMIE இன் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறுகிறார்.

 சேவைத்துறை PMI குறியீடு

சேவைத்துறை PMI குறியீடு

இந்தியாவின் சேவை துறை ஜூன் மாதம் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளதாக IHS மார்கிட் நிறுவனத்தின் PMI குறியீடு காட்டுகிறது. ஜூன் மாதம் சேவைத்துறையின் PMI குறியீடு 59.2 புள்ளிகளை எட்டியுள்ளது. இது ஏப்ரல் 201க்கு பின்பு பதிவான அதிகப்படியான அளவீடாகும்.

 11 வருட உச்சம்

11 வருட உச்சம்

சேவை துறையில் இருக்கும் நிறுவனங்கள் பணவீக்கம் அதிகமாக இருக்கும் இந்த வேளையிலும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இதனால் சேவை துறை PMI குறியீடு 11 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கட்கிழமையை விடவும் 9 பைசா சரிந்து 79.04 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வல்லரசு நாடுகளில் ரெசிஷன் அச்சம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டுச் சந்தையில் அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

வர்த்தகப் பற்றாக்குறை அளவீடு

வர்த்தகப் பற்றாக்குறை அளவீடு

ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதியின் அதிகரிப்புக்கு மத்தியில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஒரு வருடத்திற்கு முன்பு $9.61 பில்லியனில் இருந்து 25.63 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்தத் தடாலடி உயர்வுக்கு ரூபாய் மதிப்பின் விழ்ச்சியும் முக்கியக் காரணம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India in June: unemployment at 7.8 percent, services sector PMI at 11yrs high, rupee fall, trade deficit widens

India in June: unemployment at 7.8 percent, services sector PMI at 11yrs high, rupee fall, trade deficit widens ஜூன் மாதம் இந்தியாவின் நிலை இதுதான்.. வேலைவாய்ப்பு சந்தை மோசம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.