பன்றிகாய்ச்சல் பரவல் அதிகரிப்பு! யாருக்கு ஆபத்து அதிகம்?



பொதுவாக பன்றி காய்ச்சல் (swine flu) பருவ காலங்களில் வந்து போகும் தொற்று நோயாகவும் சில சமயங்களில் அது பெருந்தாற்றாகவும் மாறுகிறது.

இன்ப்ளூயன்சா (influenza) என்னும் வைரஸ் பரவலால் இந்த தொற்று உருவாகிறது.

சமீபத்தில் அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ளது. இதனை முன்கூட்டியே கட்டுப்படுவது சிறந்தது ஆகும்.

இந்த தொற்று எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன, சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம். 

அறிகுறிகள்

தொற்று உடலில் பரவ அதன் அறிகுறிகளை வெளிப்படுத்த குறைந்த 4 நாட்களாவது ஆகும்.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும்போது இருமல், சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், பசியின்மை, வாந்தி, டயேரியா போன்ற அறிகுறிகள் உண்டாகும்.  

ஆபத்து யாருக்கு அதிகம்?

  • குழந்தைகளுக்கு, குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு
  • 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் (வயதானவர்களுக்கு)
  • கர்ப்பிணி பெண்கள்
  • நாள்பட்ட நுரையீரல் பிரச்சினைகள்
  • நீரிழிவு உள்ளவர்கள்
  • இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
  • நோயெதிர்ப்பு மண்டல்ம் பலவீனமடைதல்
  • நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள்

வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

  • குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
  • யாரிடமும் கைகுலுக்காமல் இருக்கலாம்
  • ஒரு நாளைக்கு இரண்டு முறை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.

  • வைட்டமின் சி நிறைந்த உணவுகள் மற்றும் சிட்ரஸ் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அது நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும்.

  • சூப் போன்ற சூடான திரவ உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிகிச்சைகள்

 பொதுவாக வைரஸ் காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் ஆன்டி – வைரஸ் மருந்துகள் தான் இதற்கும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இதன் கூடவே நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்றுக்கள் ஏற்படாமல் இருப்பதற்கான ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.