வேலையை காட்ட துவங்கியது சீனா-வின் Sinopec..? அதிர்ச்சியில் விளாடிமிர் புதின்..!

சீனா-வை நம்பினோர் கைவிடப்படுவார் என்பதை இலங்கை-யின் வீழ்ச்சி உலக நாடுகளுக்கு உணர்த்திய நிலையில், தற்போது ரஷ்யா-வும் மிகப்பெரிய பாடத்தை Sinopec நிறுவனத்தின் வாயிலாக கற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

உக்ரைன் மீதான போருக்கு பின்பு ரஷ்யாவுக்கு வர்த்தகம், தொழில்நுட்பம் என அனைத்து வகையிலும் கைகொடுத்தது சீனா தான். இதுமட்டும் அல்லாமல் சீனா உடனான நட்புறவை மேம்படுத்தப் பல முதலீட்டு மற்றும் வர்த்தகத் திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்தது.

இந்த நிலையில் சீனா தனது வேலையைக் காட்ட துவங்கியுள்ளது. என்ன நடந்தது தெரியுமா..?

ஆட்டு பாலில் சோப்.. லட்சங்களில் வருமானம் ஈட்டும் ஈரோடு தம்பதிகள்..!

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

ஆசியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் இந்த மாதம் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்துள்ளது, ஏனெனில் மற்ற நாடுகளைப் போல் தாங்களும் அதிகப்படியான விலை கொடுக்கத் தயாராக இல்லை என்று கூறி கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சீனா குறைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

Sinopec நிறுவனம்

Sinopec நிறுவனம்

சீனா-வின் முன்னணி கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சினோபெக் (Sinopec) கடந்த இரண்டு மாதங்களில் ரஷ்யாவின் முக்கியக் கச்சா எண்ணெய் வகையான ESPO வாங்குவதை அதிகளவில் குறைத்துள்ளது.

20 மில்லியன் ESPO பேரல்
 

20 மில்லியன் ESPO பேரல்

உதாரணமாகக் கடந்த 2 மாதத்தில் சுமார் Sinopec சுமார் 20 மில்லியன் ESPO கச்சா எண்ணெய் பேரல்களை வாங்கிய நிலையில், ஜூலை மாதத்தில் குறைவான விலைக்கு ESPO எண்ணெய் வேண்டும் எனக் கோரிக்கை வைத்த நிலையில் ரஷ்ய விற்பனையாளர்கள் நஷ்டத்திற்குக் கொடுக்க மனம் இல்லாமல் விற்பனை செய்ய மறுத்தனர்.

20 டாலர் குறைவான விலை

20 டாலர் குறைவான விலை

ஜூலை மாதம் சீனாவின் Sinopec மத்திய கிழக்கு பெஞ்ச்மார்க் விலையை விட ஒரு பேரலுக்குச் சுமார் 20 டாலர் குறைவான விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் வேண்டும் என Bidding செய்தது. துபாயைத் தளமாகக் கொண்ட வர்த்தகர்களான Coral Energy, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களான CNOOC, PetroChina மற்றும் Shandong Port International Trade ஆகியவை இந்த மாதம் Sinopec-ஐ காட்டிலும் அதிக ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது.

இந்தியா

இந்தியா

ரஷ்ய ESPO கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியா ஜூன் மாதம் 3 கப்பல்களில் கச்சா எண்ணெய் வாங்கிய நிலையில் ஜூலை மாதம் 4 கப்பல்களை வாங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

24 பில்லியன் டாலர்

24 பில்லியன் டாலர்

மே மாத இறுதியில் இருந்து ரஷ்யா தனது கச்சா எண்ணெய்-யை இந்தியா, சீனாவுக்கு விற்பனை செய்ததில் மட்டும் சுமார் 24 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. ஆனால் கடந்த 4 வாரத்தில் சீனா இறக்குமதி செய்யும் ரஷ்ய கச்சா எண்ணெய் சுமார் 14 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இந்தச் சரிவுக்கு Sinopec மட்டும் காரணம் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China’s biggest oil refiner Sinopec has cut import of Russian crude ESPO; demand 20 dollar Discount

China’s biggest oil refiner Sinopec has cut import of Russian crude ESPO; demand 20 dollar Discount வேலையைக் காட்ட துவங்கியது சீனா-வின் Sinopec..? அதிர்ச்சியில் விளாடிமிர் புதின்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.