சீன ஸ்மார்ட்போன்களை தவிர்ப்பது சாத்தியமா.. இந்தியாவின் நிலை என்ன?

ஸ்மார்ட்போன் என்றாலே சீனா எனும் அளவுக்கு சீனா பிராண்டுகள் சர்வதேச சந்தையினை ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன் சந்தையில் சீனா தான் முதலிடம் எனலாம்.

இப்படி இருக்கும் பட்சத்தில் சீனாவின் மொபைல்போன்களை வேண்டாம் என கூற முடியுமா? இது சாத்தியமான ஒன்றா? என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

இது சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையை பின்னுக்கு தள்ளுமா? உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளருக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமா? என்பது பெரும் கேள்வியாகவே எழுந்துள்ளது.

12 வயதில் 3 ஆப்… கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு!

சீனாவுக்கு இந்தியா முக்கிய சந்தை.

சீனாவுக்கு இந்தியா முக்கிய சந்தை.

சீனா இந்தியா இடையே பிரச்சனைகள் இருந்து வந்தாலும், ஆழ்ந்து பார்க்கும்போது சீனாவுக்கு இந்தியாவே முக்கிய சந்தை. இந்தியாவும் முக்கிய சந்தையாக இருந்து வருகின்றது. அப்படி இருக்கும்பட்சத்தில் முழுமையாக சீன பிராண்டுகளுக்கு தடை என்பதும் சாத்தியமில்லாததாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரையில் இது மிக கடினம்.

 தடையா?

தடையா?

ஏனெனில் இன்றும் இந்தியாவில் ஸ்மார்ட்போனில் சீனாவின் கையே ஓங்கி நிற்கிறது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்தியா 150 டாலர்களுக்கு குறைவான (ரூ.12,000 கீழான), ஸ்மார்ட்போன்களை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

பதறியடித்து அறிக்கை வெளியிட்ட வெளியுறவுத்துறை
 

பதறியடித்து அறிக்கை வெளியிட்ட வெளியுறவுத்துறை

என்னினும் இந்த செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே சீன வெளியுறவுத் துறையானது அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில் வெளிப்படையான பரிவர்த்தனையும், இந்தியாவுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் சீனா அளிக்கும் என தெரிவித்தது. ஒரு வேளை இப்படி தடை செய்யப்பட்டால், அதனால் சீன மொபைல் நிறுவனங்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள கூடும் என்பதால் இந்த அறிக்கை வந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றில் ஒரு பங்கு விற்பனை

மூன்றில் ஒரு பங்கு விற்பனை

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஜூன் காலாண்டில் விற்பனையான மொத்த ஸ்மார்ட்போனில், மூன்றில் ஒரு பங்கு 12,000 ரூபாய்க்கு கீழாக போன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதியில் சீனாவின் பங்கு மிக முக்கியமாகும். சீனாவின் ஏற்றுமதியில் 80% பங்கு வகிக்கிறது.

 இந்திய நிறுவனங்கள் வீழ்ச்சி

இந்திய நிறுவனங்கள் வீழ்ச்சி

முன்னதாக லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட இந்திய பிராண்டுகள் 50% மேலாக இதில் பங்கு வகித்த நிலையில், தற்போது அதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்கள் தங்களது இடத்தினை இழந்துள்ளன. தங்களது விற்பனையில் சரிவினைக் கண்டுள்ளது.

ஜியோமி நிலவரம்

ஜியோமி நிலவரம்

150 டாலர்களுக்கு கீழாக போன்கள் தடை செய்யப்படுமாயின், ஜியோமின் தனது விற்பனையில் 11 – 14% சரிவினைக் காணலாம்.

ஐடிசி அறிக்கையின் படி, இந்தியாவில் அதன் 66% போன்கள் 150 டாலர்களுக்கு கீழாக விலை உள்ளது. இன்றும் சர்வதேச அளவில் ஜியோமி முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனமாக உள்ளது.

 

சாம்சங் & ஆப்பிள் பிரச்சனையில்லை

சாம்சங் & ஆப்பிள் பிரச்சனையில்லை

எனினும் சீன நிறுவனங்களின் இந்த விற்பனையால் சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனையில் தாக்கம் எதுவும் ஏற்படவில்லை.

சீன நிறுவனங்களின் இந்த ஆதிக்கத்தினை போக்க இந்தியா இப்படி ஒரு தடையை அமல்படுத்துமாயின், அது உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும். இது சீனாவின் இறக்குமதியினை குறைக்கும். எனினும் இப்படி ஒரு முடிவு வருமா? இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பலன் கிடைக்குமா?

 

தடை எதற்காக?

தடை எதற்காக?

கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு, 300 ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதில் டிக்டாக், வீசாட், பைட்டான்ஸ், வீசாட், டென்சன்ட் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட ஆப்கள் தடை செய்யப்பட்டன.

இதற்கிடையில் சமீபத்தில் ஜியோமி, ஒப்போ, விவோ உள்ளிட்ட சீன நிறுவனங்கள், வரி மோசடியில் ஈடுபட்டதாக பிரச்சனை எழுந்தது. இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது சாத்தியமா?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Is it possible for India to avoid Chinese smartphones?

Is it possible for India to avoid Chinese smartphones?/சீன ஸ்மார்ட்போன்களை தவிர்ப்பது சாத்தியமா.. இந்தியாவின் நிலை என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.