ஒரே வருடத்தில் உயர்ந்த நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?

அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று பிரபலமாக இருப்பவர்களின் சொத்து மதிப்புகளை அறிய பலருக்கும் ஆர்வம் இருக்கும்.  அப்படி பெரும்பாலான மக்கள் அறிந்துகொள்ள விரும்புவது நமது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து விவரம் தான், தற்போது அவரது முழுமையான சொத்து மதிப்பு விவரம் என்ன என்பது பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.  நரேந்திர மோடியின் சொத்துக்கள் மட்டுமல்லாது மத்திய அமைச்சர்களின் சொத்துக்களையும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருக்கின்றது.  அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த 2021ம் ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கிட்டத்தட்ட ரூ.26 லட்சம் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.  

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி நிலவரப்படி நரேந்திர மோடியின் சொத்துமதிப்பு 1 கோடியே 97லட்சத்து 68ஆயிரத்து 885 ரூபாயாக இருந்தது.  தற்போது மார்ச்-31, 2022ம் ஆண்டின் நிலவரப்படி அவரது சொத்து மதிப்பு 2 கோடியே 23 லட்சத்து 83 ஆயிரத்து 504 ரூபாயாக உள்ளது.  காந்திநகரில் உள்ள மோடியின் குடும்ப சொத்தில் அவருக்கென சொந்தமாக இருந்த பங்கில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான பங்கை தானமாக கொடுத்துவிட்டார், இதன் காரணமாக தற்போது பிரதமரிடம் எவ்வித அசையா சொத்துக்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது நரேந்திர மோடியிடம் கையில் உள்ள இருப்பு 35ஆயிரத்து 250 ரூபாயாகும், அவரது வங்கியிலுள்ள இருப்பு 46 ஆயிரத்து 555 ரூபாயாகும், இந்த வாங்கி இருப்பு விகிதம் கடந்த ஆண்டை விட குறைவு என்று கூறப்படுகிறது.

 

மேலும் மோடியிடம் ரூ.9,05,105 மதிப்பிலான தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளது மற்றும் அவர் ரூ.1,89,305 மதிப்பில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை எடுத்திருக்கிறார்.  அதோடு ரூ.1,73,063 மதிப்பிலான நான்கு தங்க மோதிரங்கள் அவரிடம் இருக்கிறது.  மேலும் அவரிடம் எவ்வித வாகனங்களோ அல்லது அசையா சொத்துக்களோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Modi

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.