iphone 14: இந்தியாவில் உற்பத்தியை துவங்குகிறதா ஆப்பிள் நிறுவனம்?

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் மிக பெரிய ஐபோன் உற்பத்தி கூடம் சீனாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து சீனா மற்றும் அமெரிக்கா இடையில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவில் பெரும் உற்பத்தியை துவங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Apple 14 உற்பத்தியை அதன் ஆரம்பகட்ட தயாரிப்பு முடிந்து சீனாவிலிருந்து டெலிவரி செய்யப்பட்ட பிறகு இரண்டு மாதங்களில் இந்தியாவில் துவங்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதற்காக இந்தியாவில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களோடு பலகட்ட பேச்சுவார்த்தை மற்றும் திட்டமிடல்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய TF சர்வதேசிய செக்யூரிட்டிஸ் குரூப்பை சேர்ந்த மிங்-சி கோ கூறும்போது ஆப்பிளின் நீண்டகால யுக்தியாக இந்த திட்டமிடல் உள்ளது. ஏறக்குறைய இரண்டு நாடுகளில் இருந்தும் ஒரே நேரத்தில் ஐபோன் ஏற்றுமதியை ஆப்பிள் நிறுவனம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறுகிறார். மேலும் இது அவர்களின் வியாபாரத்தை விஸ்தரிப்பது மற்றும் சீனாவில் குறைப்பதற்கான திட்டமிடலின் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் சீனாவில் இருந்து எப்படி பொருட்களை எடுத்து வந்து இந்தியாவில் Apple14ஐ அசெம்பிள் செய்வது என சென்னையில் முன்னோட்டம் செய்து பார்த்ததாக பெயர் சொல்ல விரும்பாத ஒருவரால் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பலரோ ஒரே சமயத்தில் இரண்டு நாடுகளில் இருந்தும் உற்பத்தியை ஏற்றுமதி செய்வது சாத்தியமில்லை என்றும், Apple14 இன் இறுதிப்படுத்தப்பட்ட தயாரிப்பு இந்தியாவில் முடிவதற்க்கே அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கம் ஆகி விடும் என கணித்துள்ளனர்.எனவே செப்டம்பர் வெளியிட வாய்ப்பில்லை எனவும், இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு Apple14 வெளியீடு திட்டமிடல் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இது குறித்து apple அல்லது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்த விதமான அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இந்த தகவல் வெளி வந்த பிறகு இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமான Redington india Ltd..இன் மதிப்பு 9.5% உயர்ந்துள்ளது.

இந்த திட்டமிடல் ஒப்பீட்டளவில் சீனா மற்றும் இந்தியா இடையே உள்ள டெக்னாலஜி இடைவெளியை குறைக்கும். மேலும் இது இந்தியாவின் டெக் துறையில் ஒரு மைல்கல் என்றே கூறலாம்.

என்னதான் இரண்டு நாடுகளிலும் ஒரே நேரத்தில் ஏற்றுமதியை செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானாலும் ஆப்பிள் நிறுவனம் பிரச்சனை ஏதும் இல்லாமல் இதை சுமூகமாக முடிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. அதனால்தான் ஒரே தேதி வெளியீட்டில் கவனம் செலுத்தாமல் சீனாவில் இருந்து ப்ராடக்ட்டை வேகமாக வெளி கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதாக பலர் கூறுகின்றனர்.

மேலும் இந்தியாவில் உற்பத்தி கூடத்தை அமைப்பது ஒன்றும் சுலபமல்ல. ஆப்பிள் நிறுவனம் கடைபிடிக்கும் ரகசியம் மற்றும் கட்டுப்பாடான நிறுவன ஒழுங்குமுறைகளை இந்தியாவில் அமல்படுத்துவது சவாலான காரியமாகும். இதற்காக பலகட்டமாக பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பணியாட்களை சேர்ப்பது முதல் மற்ற ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலை வரை பலகட்ட வடிகட்டல் முறைகளோடு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இங்கு இருக்கும் ஏற்றுமதி இறக்குமதி நடைமுறைகள் சோதனை வழிமுறைகள் ஆப்பிள் நிறுவனத்தின் ரகசியங்களை பாதுகாப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்று ஆப்பிள் கருதுவதாக கூறப்படுகிறது.

– சுபாஷ் சந்திரபோஸ்

Apple-iPhone-14 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Apple A15 Bionic (5nm)டிஸ்பிளே6.1 inches (15.49 cm)சேமிப்பகம்64 GBகேமரா12 MP + 12 MPபேட்டரி3115 mAhஇந்திய விலை79900ரேம்4 GB, 4 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.