உத்தர பிரதேசத்தின் லக்னோவில் குடியிருப்புவாசியை பிட்புல் நாய் கடித்து குதறிய நிலையில், அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பிரேம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வசிக்கும் சங்கல்ப் நிகாம் என்பவர் கடந்த 3ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பியபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சங்கர் என்பவரின் செல்லப்பிராணியான பிட்புல் நாய் அவரை கடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் செல்லப் பிராணியின் உரிமையாளர் மீது புகார் அளித்தார்.