இன்று (17) இரவு 9.00 மணி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன.
அமைச்சர் கஞ்சன விஜேயசேகர இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ,92 ஒக்டெயின் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 40 ரூபாவிலும், டிசல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவிலும் குறைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய விலை மறுசீரமைப்புக்கு அமைய ஒக்டெயின் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 370 ரூபாவாகும், டீசல் லீட்டர் ஒன்றின் 415 ரூபாவாகும்.