இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2022 ஒக்டோபர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலைமை: |
கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. |
காற்று : |
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்குதிசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. |
கடல் நிலை: |
காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும். |