2022 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று

2022 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று (13) மெல்போர்னில் நடைபெறுகிறது.

இதில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

8-வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ஆம் திகதி ஆரம்பமானது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

இதில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2009 ஆம் ஆண்டு உலக உலகக்கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணி 3-ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இதேபோல் 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி 3-ஆவது முறையாக இறுதிபோட்டிக்குள் நுழைந்துள்ளது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லரும் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் தலைமை தாங்கவுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேன உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் கள நடுவர்களில் ஒருவராக பணியாற்றவுள்ளார். மற்றுமொரு இலங்கையரான ரஞ்சன் மடுகல்ல இம்முறை இந்த இறுதிப் போட்டியின் போட்டி மத்தியஸ்தராக கடமை புரியவுள்ளார்.

T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் இரண்டாவது கள நடுவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மரைஸ் எரஸ்மஸ் பணியாற்றவுள்ளார்.

மூன்றாவது நடுவராக நியூசிலாந்தின் கிறிஸ் கெபனி (Chris Gaffaney) பணியாற்றவுள்ளார் நான்காம் நடுவuhf அவுஸ்திரேலியாவின் போல் ரைபலுக்கு (Paul Reiffel) செயல்படவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.