அரசின் செயல்பாட்டில் தலையிடவில்லை: கேரள ஆளுநர் ஆரிப் முகமது தகவல்

புதுடெல்லி: கேரளத்தில் உயர் கல்வித் துறையில் ஆளுநரின் தலையீடு அதிகரித்து வருவதை கண்டித்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி இடதுசாரி அமைப்புகள் நேற்று மிகப்பெரிய பேரணி நடத்தின.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியதாவது:

பல்கலைக்கழகங்களை நடத்தும் பணி, வேந்தரான ஆளுநரிடம் உள்ளது. அதேபோன்று அரசாங்கத்தை நடத்தும் பணி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் உள்ளது. அரசின் அன்றாட பணிகளில் நான் தலையிடவில்லை. அவ்வாறு தலையிட முயன்றதற்கு ஒரு உதாரணத்தை அவர்கள் கூறட்டும். அந்த நிமிடமே நான் எனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். ஆனால், பல்கலைக்கழகங்களின் தினசரி செயல்பாடுகளில் ஆளும் அரசு தலையிட்டதற்கு 1001 உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும். கேரளாவில் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

அதில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நியமனங்களும் சட்டவிரோதமானவை என கடந்தாண்டு வரை நீங்கள் ஏன் பிரச்சனை எழுப்பவில்லை? சட்டத்தை மீறி 100 சதவீத நியமனங்களை நடத்திய மாநிலம் வேறு ஏதேனும் உள்ளதா? கேரளத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கட்சித் தொண்டர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆக்கிரமித்துள்ள கூடாரமாக மாறிவிட்டன. நான் யாருக்கும் அழுத்தம் தர வேண்டிய அவசியமில்லை. அது அவர்களுக்கும் தெரியும். அதற்கான போதுமான ஆதாரங்கள் அவர்களிடமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.