ஊடக தொழில் தரத்தை மேம்படுத்துவதற்காக ,அரசாங்கம் செயல்படுகிறது

ஏந்தாவொரு ஊடகத்தையும் அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் தயார் இல்லை என்று வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2023 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்றும் 5வது நாளாக தொடர்ந்தும் நடைபெற்றது. வரவு செலவுத் திட்டத்தில் வெகுஜன ஊடகத்திற்கான நிதி ஒதுக்Pட்டு குழு நிலை விவாதத்தில் அமைச்சர் இன்று உரையாற்றினார்.

சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கு கடந்த காலத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனை சரிசெய்யும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

உயர்தர ஊடகக் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மேலும் விரிவுபட்ட வகையில் விவாதிக்கப்பட்டு தன்னிச்சையான கட்டுப்பாடு மற்றும் ஊடக தொழில் தரத்தை மேம்படுத்துவதற்காக  அரசாங்கம் செயல்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

நாடு கண்டுள்ள வீழ்ச்சிக்கு அமைவாக ,நாட்டின் பாரிய பாதிப்பு வெளிநாடடிலும் இடம்பெற்றுள்ளது. வீதிகளில் இடையூறு செய்தல், பாராளுமன்றத்தை கூடவிடாமல் இருப்பதற்கான நிலையை ஏற்படுத்துதல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு இடையூறு செய்தல் போன்ற விடயங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றன என்றும் அமைச்சர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.