உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு| Dinamalar

லண்டன்: குரங்கு அம்மை நோய்க்கு ‘எம் பாக்ஸ்’ என்ற புதிய பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1958ல் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இந்த நோய் குறித்து ஆராய்ச்சி நடத்தி குரங்கு அம்மை என்ற பெயர் சூட்டப்பட்டது.

இழிவு:

ஆனால் குரங்கு அம்மை என்ற பெயர் ஆப்ரிக்க கண்டத்தை இனரீதியில் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இந்த நோய் ஆப்ரிக்க நாடுகளில் இருந்துதான் பரவுவதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்பதே உண்மை.

எனவே ‘குரங்கு அம்மை என்ற பெயருக்கு பதிலாக இந்த தொற்று நோய்க்கு வேறு பெயர் சூட்ட வேண்டும்’ என உலகில் பல நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதன் அடிப்படையில் பல்வேறு விஞ்ஞானிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து குரங்கு அம்மை நோய் இனி ‘எம் பாக்ஸ்’ என அழைக்கப்படும்.

2 ஆண்டு:

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குரங்கு அம்மை மற்றும் எம் பாக்ஸ் பெயர்கள் இரண்டும் பயன்படுத்தப்படும். அதன் பின் எம் பாக்ஸ் என்ற பெயர் மட்டுமே பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.