ரத்தன் டாடா வாழ்க்கை சினிமாகுது?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை,: ரத்தன் டாடா வாழ்க்கையை படமாக்குவதாக வெளியான தகவலை, இயக்குனர் சுதா மறுத்துள்ளார்.

ஏர்டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி, ‘சூரரைப்போற்று’ படத்தை சுதா இயக்கினார். தற்போது, இப்படத்தை ஹிந்தியிலும் இயக்கி வருகிறார். தொழில் அதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை, சுதா படமாக இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து, சுதா கூறுகையில், ”ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை நான். அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்கும் எண்ணம், இப்போதைக்கு இல்லை.
”என் அடுத்த படம் பற்றிய ஆர்வத்தைக் காட்டிய அனைவருக்கும் என் நன்றி. என் அடுத்த படத்தை பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன்,” என்றார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.