மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் AIIMS மருத்துவமனையில் அனுமதி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 63 வயதான அவர் மருத்துவமனையின் தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள சதைவ் அட்டல் நினைவிடத்திற்கு சென்று நிதியமைச்சர் சீதாராமன் மலர் அஞ்சலி செலுத்தினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கமான பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது வயிற்றில் லேசான தொற்று இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது, நியாயமான விலையில் உலகத் தரத்திலான மருந்தை இந்தியா வழங்குவதால், உலகின் மருந்தகம் என்று இந்தியா அறியப்படுகிறது என்று நிதியமைச்சர் கூறினார். பிப்ரவரி 1, 2023 அன்று, சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை, அமைச்சர் தனது வரவிருக்கும்பட்ஜெட் தாக்கல் பற்றீக் கூறுகையில் “பொதுச் செலவினங்களின் பின்னணியில் வளர்ச்சியைத் தொடரும்” என்று கூறியதன் மூலம் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை போல இருக்கும் என குறிப்பால்  கூறியிருந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.