ஜம்முவில் குண்டுவெடிப்பு: ஒரு குழந்தை பலி – 5 பேர் படுகாயம்| Terrorist attack: 4 civilians killed in Jammu; Security forces manhunt

ரஜோரி : ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் நான்கு பேர் பலியாகினர்; ஆறு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உயிரிழந்தது, 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். அதேபோல் மேல் டாங்கிரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

latest tamil news

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 4 பொதுமக்களை சுட்டுக்கொன்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

போராட்டம்:

latest tamil news

ஜம்மு மற்றும் காஷ்மீர் அப்பர் டாங்ரி கிராமத்தில் பயங்கரவாதிகளால் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, ரஜோரியில் உள்ள டாங்ரியில் உள்ள மெயின் சவுக்கில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

latest tamil news

இதுகுறித்து கூடுதல் டி.ஜி.பி., முகேஷ் சிங் கூறியதாவது: ரஜோரி நகரில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள மேல் டாங்க்ரி கிராமத்தில் பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர்; ஆறு பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஜம்மு மாநிலம் சித்ரா பகுதியில் டிச.28ல் என்கவுன்ட்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 4 பயங்கவாதிகளிடம் இருந்தும் 7 ஏ.கே., ரக துப்பாக்கிகள், ஒரு எம்-4 ரக துப்பாக்கி, 3 பிஸ்டல், ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய பயங்கரவாதியை தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜம்முவில் குண்டு வெடிப்பு:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட ரஜோரி அருகே மேல் டாங்கிரி பகுதியில், இன்று(ஜன.,02) குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில்,ஒரு குழந்தை உயிரிழந்தது, 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.