
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார்.
பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
கடந்த டிசம்பர் 24ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. கடந்த புதன் கிழமை வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. படத்தின் வெளியீட்டிற்காக படக்குழு காத்திருக்கும் நிலையில் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது.

வாரிசு படத்தின் கலை இயக்குநர் சுனில் பாபு கொச்சியில் மாரடைப்பால் மரணமடைந்தார். பிரபல கலை இயக்குநர் சாபு சிரிலிடம் பணியாற்றியவர் இவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பெரிய படங்களில் பணிபுரிந்துள்ளார். துப்பாக்கி, உருமி, கஜினி உள்ளிட்ட படங்களில் சுனில் பாபு கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
newstm.in