புஷ்பக் ரயில் விபத்தில் மரணமடைந்தோருக்கு அரசு நிவாரணம்

ஜல்கான் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த புஷ்பக் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு நிவாணம்  அறிவித்துள்ளது. நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து புறப்பட்ட புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பட்னேரா ரெயில் நிலையம் அருகே ரெயில் நேற்று மாலை வந்தபோது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது.  எனவே உடனடியாக அங்கிருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது. பயணிகள் பலர் … Read more

மராட்டியத்தில் ரெயில் விபத்து – ராகுல் காந்தி இரங்கல்

புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று புறப்பட்ட புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பை நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில், மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பட்னேரா ரெயில் நிலையம் அருகே ரெயில் இன்று மாலை வந்தபோது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. உடனடியாக அங்கிருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரெயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், … Read more

பந்துவீச்சாளர்களை பாராட்டிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்

கொல்கத்தா, பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more

டிரம்ப் அறிவிப்பு எதிரொலி; நாடு திரும்புவோரை தங்க வைக்க மெக்சிகோவில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைப்பு

மெக்சிகோ சிட்டி, அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டார். அதில் குறிப்பாக அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்படி அமெரிக்காவிற்கான அகதிகள் வருகை மறு உத்தரவு வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப்போவதாகவும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த … Read more

திகிலில் Duraimurugan, Alert கொடுத்த Stalin! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் எம்.பி கதிர்ஆனந்த். பிடிபட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றை குறித்தும் கேள்விகள் அடுக்கப்பட்டது. பெரும்பாலும், தெரியும்…தெரியாது, ஆம்…இல்லை…என பதில் கொடுத்தார். கிட்டத்தட்ட ஒன்பதரை மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணை குறித்த பதற்றம், அமைச்சர் துரைமுருகனுக்கு இருந்தது. உட்கட்சியிலும், துரைமுருகனை டார்கெட் செய்வதாகவும் தகவல். இன்னொரு பக்கம், டெல்லி குறி வைப்பதால், அனைத்து அமைச்சர்களும் கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.  முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் … Read more

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக மீன்வளத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்நிலையில், கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச … Read more

போலியான சித்தரிப்புகளால் தேர்தல் நடைமுறை பாதிப்பு: தலைமை தேர்தல் ஆணையர் கவலை

புதுடெல்லி: தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பிக்கையை சிதைக்கக்கூடியவையாக போலி சித்தரிப்புகள் இருப்பதாகவும், இத்தகைய போலி சித்தரிப்புகளுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் கமார் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், மொரிஷியஸ், பூடான், கஜகஸ்தான், நேபாளம், நமீபியா, இந்தோனேஷியா, ரஷ்யா, துனிஷியா உள்ளிட்ட 13 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் (EMBs) … Read more

எல்ஜிபிடிக்யூ புறக்கணிப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கையின் விளைவுகள் எத்தகையது?

‘சர்வ வல்லமை பொருந்திய’ நாடாக அறியப்படும் அமெரிக்காவின் 47-வது அதிபராகியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அதன் அதிர்வலைகள் இருக்கத்தானே செய்யும் என்பது போல் உலக நாடுகளுக்கான எச்சரிக்கை தொடங்கி உள்நாட்டிலேயே அதிரடி உத்தரவுகளும் அமலாகி வருகின்றன. “கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்..” என்று எல்ஜிபிடிக்யூ (LGBTQ) சமூகத்தினருக்காகவும், குடியேறிகளுக்காகவும் இறைஞ்சிய மதபோதகருக்கு, “அரசியலை தேவாலயத்துக்குள் கொண்டுவருவதா?” என்று கடுமை காட்டியுள்ளார் அதிபர் ட்ரம்ப். தனது முதல் உரையிலேயே “இனி ஆண், பெண் என இரண்டு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்” என … Read more

ChatGPT சேவை உலக அளவில் முடக்கம்: லட்சக்கணக்கான பயனர்கள் தவிப்பு

சென்னை: உலக அளவில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை முடங்கியுள்ள காரணத்தால் மில்லியன் கணக்கான பயனர்கள் அந்த சேவையை பயன்படுத்த முடியாமல் தவிப்பு. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண தங்கள் தொழில்நுட்ப குழு பணியாற்றி வருவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. பல்வேறு இணையாதள சேவை முடக்கம் குறித்த தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கி வரும் டவுன் டிடெக்டர் தளத்தில் ஆயிரக்கணக்கான பயனர்கள் ரிப்போர்ட் செய்துள்ளனர். சாட்ஜிபிடி வலைதளம் மற்றும் ஏபிஐ சேவையை பயன்படுத்த முடியவில்லை என … Read more

ரத்தான டங்ஸ்டன் சுரங்க ஏலம்.. கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!

டங்ஸ்டன் சுரங்க ஏலம் விட அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.