விமானத்தில் மது போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஷங்கர் மிஸ்ரா என்ற நபர் பெங்களூருவில் பதுங்கியிருந்த நிலையில் தனிப்படை போலீஸார் அவரை கைது செய்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது பெண் பயணி மீது சக ஆண் பயணி ஓருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது.
குற்றம்சாட்டப்பட்ட அந்நபர், தன் மனைவி, குழந்தைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அசிங்கம், அதனால் போலீசில் புகார் தெரிவிக்க வேண்டாம் என பெண் பயணியிடம் கெஞ்சி, அழுதார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்த நபரும் சமரசமாக சென்று விட்டதாக கூறப்பட்டது.
ஆனால், குற்றம்சாட்டப்பட்ட நபருடன் சமாதானமாக போகும்படி விமான நிறுவன ஊழியர்கள் தன்னை வற்புறுத்தியதாக பெண் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட நபர் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வெல்ஸ் பார்கோ என்ற பன்னாட்டு நிதி சேவை நிறுவனத்தின் இந்திய பிரிவில் பணியாற்றிய சங்கர் மிஸ்ரா என்பது தெரிய வந்தது.
பணியில் இருந்து அவரை நீக்கி விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே விமானத்தில் யாரேனும் முறைகேடாக நடந்து கொண்டால் அதுபற்றி உடனே தெரிவிக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த நபர் தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்தாலும் கூட சமூகவலைதளங்கள் மூலம் அவரது நண்பர்களை தொடர்பு கொண்ட நிலையில் போலீஸார் அதனைவைத்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.
அவர் கிரெடிட் கார்டை பயன்படுத்தியுள்ளார். அதனை வைத்தும் போலீஸார் அந்த நபரை நெருங்கி கைது செய்துள்ளனர். கைது செய்த பிறகு டெல்லி அழைத்துச் சென்றுள்ளனர்.
newstm.in