Self Charging செய்துகொள்ளும் Google TV Remote! எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய திட்டம்!

நாம் தொலைக்காட்சிகளில் தினசரி பல நிகழ்ச்சிகளை பார்த்து ரசிப்போம். அதுவும் தற்போது மக்கள் ஸ்மார்ட் டிவி பயன்படுத்துகிறார்கள். இதற்காக தனியாக சென்சார் ரிமோட் பயன்படுத்தப்படுகிது.

இதன் காரணமாக சராசரி ரிமோட் பேட்டரி அளவை விட கூடுதலான பேட்டரி தேவை இருக்கும். இவை அடிக்கடி சார்ஜ் தீர்ந்து அடிக்கடி மாற்றவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக தானாகவே சார்ஜ் ஆகிக்கொள்ளும் ரிமோட் ஒன்றை TW electronics நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ரிமோட் அடியில் உள்ள பேட்டரி மேலே ‘Photovoltaic panel’ ஒன்றை பொருத்தி அதன் மூலமாக சார்ஜிங் நடக்கும்.

இதற்காக நாம் தனியாக எதுவும் செலவழிக்க தேவையில்லை நமது வீட்டில் இருக்கும் வெளிச்சம் போதும். அந்த வெளிச்சம் மூலமாகவே நமது ரிமோட் தானாக சார்ஜிங் ஆகும்.

இந்த ரிமோட் அறிமுகம் குறித்து பேசிய TW எலக்ட்ரானிக்ஸ் “தானாகவே சார்ஜிங் ஆகிக்கொள்ளும் ரிமோட் கண்ட்ரோல் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி என்றும் இதனை Exeger மற்றும் Google TV உடன் இணைந்து செய்து இவ்வளவு விரைவாக உருவாக்கமுடிந்தததாக” தெரிவித்துள்ளது.

இந்த ரிமோட் ஒளியை மின்சாரமாக மாற்றி ரிமோட் உள்ளே இருக்கும் பேட்டரி சார்ஜ் ஆகும். இதேபோல இரு டெக்னாலஜி ஒன்றை சாம்சங் மற்றும் Amazon ஆகிய நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்துவருவதாகவும் அதனை அடுத்த Fire TV உடன் அறிமுகம் செய்யவுள்ளது.

இதே பேட்டரி எப்போது Google TV உள்ளே அறிமுகம் ஆகும் என்று தெரியவில்லை. இந்த Google TV பயனர்களுக்கு தனிப்பட்ட வசதிகளை வழங்கவுள்ளது. நமது Profile உள்ளே சென்றால் நமக்கான தனிப்பட்ட தகவல்கள் மற்றும் விவரங்களை வழங்கும்.

இதுபோன்ற ரிமோட் நமக்கு கிடைத்தால் நாம் தொடர்ந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தமுடியும். மேலும் இது ஸ்மார்ட் டிவி ஆராய்ச்சியில் ஒரு புதிய சாதனையாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.