செட்டிநாட்டை கலக்கிய பழங்கால கார்கள்; புகைப்படம் எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள  செட்டிநாடு குமர ராணி மீனா முத்தையா ஆட்சி அரண்மனை முன்பு பழங்கால கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியான செட்டிநாடு ஹெரிடேஜ் கண்காட்சி  நடந்தது. மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரின் கிளப் சார்பில் நடந்த இந்த கண்காட்சியில் 1914 ஆண்டு முதல் 1991 வரையிலான பழங்கால கார்கள் பங்கு பெற்றன. 

ஜெர்மன் பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தயாரித்த கார்கள் பொதுமக்களை கவர்ந்தது. 1886 இல் தயாரிக்கப்பட்ட பென்ஸ் ரக மாதிரி கார் அனைவரையும் வியக்க வைத்தது. இதே போல பழமையான பத்துக்கும் மேற்பட்ட பைக்குகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

வெளிநாட்டினர் உட்பட பலரும் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்

புராதான பாரம்பரிய வண்டிகளை பாதுகாப்பதும் புதுப்பிப்பதும் அதனை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருவது பாராட்டத்தக்கது சென்னையில் இருந்து 20 கார்கள் மற்றும் 10 பைக்குகள் நெடுஞ்சாலை வழியாக செட்டிநாடு வந்தடைந்தது. பாரம்பரிய நகரமான செட்டிநாட்டில் பாரம்பரிய அரண்மனை முன்பு பாரம்பரிய கார்கள் நிற்பது பலரையும் வியப்பை ஆழ்த்தியுள்ளது. பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.