தளபதி 67-ல் இவ்வளவு குறியீடுகளா? Rolex LCU-வில் விஜய்-க்கு தம்பியா?

Thalapathy 67 Updates: தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் இணையதளத்தில் அந்த படத்தின் கதைகளை அவர்களாகவே எழுதி வருகின்றனர். உண்மையிலேயே தளபதி 67 படத்தில் வெளியான அப்டேட் என்ன? மேலும் அந்த அப்டேட் கூறும் குறியீடுகள் என்னென்ன? என்பதைக் குறித்து இந்ததொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

வம்சி இயக்கத்துல பொங்கலுக்கு வெளியான படம் வாரிசு. தளபதியின் 66வது படமா வெளியான இந்தபடம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் வாரிசு படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை விட “தளபதி 67” படத்துக்கு அதிகமாக உள்ளது. இந்த படத்தின் இயக்கநர் லோகேஷ் கனகராஜ். இவர்களது கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. இதனால் வாரிசு படத்தை விட தளபதி 67 படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியதை அடுத்து, வாரிசு படம் வெளியான பின்னரே  தளபதி 67 படத்துக்கான அப்டேட்டை விட வேண்டும் என்பதில் படக்குழு தெளிவாக இருந்தது.

அதன் அடிப்படையில் தற்போது தளபதி 67 படத்திக்கான அப்டேட் வெளியாகியுள்ளது. அந்தவகையில் ஸ்டுடியோ 7 (Studio 7) லலித் இந்த படத்தை தயாரிக்கிறார். ‘தளபதி 67’ திரைப்படத்திற்கும் இசையமைகிறார் இசையமைப்பாளர் அனிருத். லோகேஷின் முந்தய படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட  திரைப்படங்களுக்குப் பணியாற்றிய பெரும்பாலான கலைஞர்கள் இந்த படத்திலும் இணைந்துள்ளனர்.

தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து, படக்குழு ஷூட்டிங்கில் கலந்து கொள்ள காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இதுவும் இதுவரை இல்லை. இந்நிலையில், படக்குழு படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுள்ளதாக ஒருசில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதில் நடிகை திரிஷா விமான நிலையத்தில் மாஸ்க்-உடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர் தளபதி 67 படத்துக்காக காஷ்மீர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு நடிகை பிரியா ஆனந்த்தும் திரிஷாவுடன் பயணித்துள்ளாராம். தற்போது அவர்களின் பிளைட் டிக்கெட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு பக்கம் தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றி தகவல் வெளியாகி வரும் நிலையில், மறுபுறம் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என பலரும் பேசி வருகின்றனர். சிலர் தளபதி 67 படத்தின் போஸ்டரை தலைகீழாக பார்க்கும் போது எழுத்துக்கள் LCU போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். LCU என்பது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்பதன் சுருக்கமாகும். கைதி மற்றும் விக்ரம் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த தொடர்புகளின் அடிப்படையில் LCU அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா மிரட்டி இருப்பார். இந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் அண்ணனாக தளபதி 67 இல் விஜயின் கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்றும் சிலர் பேசி வருகின்றனர். தற்போது வரை LCU-வில் நடிகர் கார்த்தி, கமல்ஹாசன், சூர்யா, நரேன், பஹத் பாசில், அர்ஜூன் தாஸ் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஃபோட்டோவை பார்த்த ரசிகர்கள் இது மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்யும் விஜய் சேதுபதியும் மோதிக் கொள்வது போன்ற விதத்தில் இந்த போட்டோ வெளியாகி உள்ளது. அதனால் இந்த படம் மாஸ்டர் படத்தில் ஜேடி கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். இப்படியாக பலரும் பல்வேறு விதமாக ‘தளபதி 67’ கதை குறித்து பேசி வரும் நிலையில், உண்மையிலேயே இந்த படத்தின் கதை என்ன? கதைக்களம் எப்படி இருக்கப்போகிறது என்பது படம் வெளியானால்தான் தெரியும். அதுவரை காத்திருப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.