500 மாணவிகளுக்கு மத்தியில் அமரவைக்கப்பட்ட 12-ம் வகுப்பு மாணவர்… அதிர்ச்சியில் மயக்கம்!

500 மாணவிகளுக்கு மத்தியில் தனி ஒருவனாக தேர்வு எழுதச் சென்ற மாணவரொருவர் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம், ஷெரீப் அல்லாமா இக்பால் கல்லூரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவரொருவர், நேற்று நாளந்தா அருகே பிரில்லியண்ட் ஸ்கூல் என்னும் பள்ளியில் இண்டர் மீடியட் தேர்வு எழுதச் சென்றிருக்கிறார். அங்கு, இவரைத் தவிர 500 மாணவிகள் தேர்வெழுத வந்திருந்தனர். தேர்வறைக்குள் மாணவர் மணி சங்கர், 500 மாணவிகள் மத்தியில் அமரவைக்கப்பட்டிருக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத அவருக்கு, பதற்றத்தில் வியர்வை கொட்டியுள்ளது. அந்தப் பதற்றத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார் அவர்.
image
பதற்றம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவருக்குக் காய்ச்சல் உண்டானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அந்த மாணவர், அங்குள்ள சதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவர் மணிசங்கரின் அத்தை, “தேர்வு மையத்தின் அறை முழுவதும் வெறும் மாணவிகளே இருப்பதைக் கண்டு அவன் பதற்றமடைந்துள்ளான். அந்தப் பயத்தில் அவனுக்கு வியர்த்துக் கொட்டியுள்ளது. அந்த பதற்றத்தினாலேயே அவன் மயக்கம் போட்டு விழுந்ததுடன் காய்ச்சலும் வந்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது அவன் நலமாக இருக்கிறான்” எனத் தெரிவித்துள்ளார்.
<blockquote class=”twitter-tweet”><p lang=”hi” dir=”ltr”>अजब-गजब! नालंदा में बिहार बोर्ड 12वीं की परीक्षा के दौरान एक छात्र को 500 लड़कियों के बीच बैठा दिया गया. नतीजा देखिए- लड़का बेहोश हो गया. नर्वस होकर गिर गया. परीक्षार्थी मनीष शंकर को अस्पताल लाना पड़ा…नालंदा से अमृतेश की रिपोर्ट.Edited by <a href=”https://twitter.com/iajeetkumar?ref_src=twsrc%5Etfw”>@iajeetkumar</a> <a href=”https://t.co/cJTmaLcfmi”>pic.twitter.com/cJTmaLcfmi</a></p>&mdash; Prakash Kumar (@kumarprakash4u) <a href=”https://twitter.com/kumarprakash4u/status/1620725291017707520?ref_src=twsrc%5Etfw”>February 1, 2023</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
500 மாணவிகளுக்கு நடுவில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர், பயத்தால் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
image
இதுகுறித்து மருத்துவர்கள், “நம் உடலில் வெவ்வேறு வகையான நுண்ணிய வியர்வைச் சுரப்பிகள் பல மில்லியன்கள் அளவில் உள்ளன. இச்சுரப்பிகள் மனித உணர்ச்சிகளின் தூண்டுதல்களுக்கு (Stimuli) உட்படக்கூடியவை. இதில் கழுத்து, நெற்றி, அக்குள், தொடையிடுக்கு ஆகிய உடற்பகுதிகளில் காணப்படும் வியர்வைச் சுரப்பிதான் அபோக்ரைன் (Apocrine). இச்சுரப்பிகள் பதற்றம், பயம், கோபம் முதலிய தீவிரமான உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வியர்வையை வெளிக்கொணர்பவை. நாம் அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த உணர்ச்சிக்கும் ஆட்படும்போது இச்சுரப்பிகள் வியர்வையைச் சுரக்கும். மழை நாட்களிலும், குளிர்காலத்திலும்கூட நமக்கு வியர்ப்பதற்குக் காரணம் இதுவே காரணம்” என்கின்றனர்.
இவ்விவகாரத்தில், மாணவர் 50 மாணவிகளுக்கு மத்தியில் அமரவைக்கப்பட்டாரா அல்லது 500 மாணவிகளுக்கு மத்தியில் அமரவைக்கப்பட்டாரா என்றும் குழப்பம் நிலவி வருகிறது. சில ஊடகங்கள் 50 மாணவிகள் அங்கு இருந்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.